இந்திய அணி மிக மோசமாக விளையாடினால் கூட அன்றைய நாளில் பாகிஸ்தான் அணியை வென்றுவிடும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டி இருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் முதல் மற்றும் இரண்டாவது சுற்றில் மோதிக்கொண்டன. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி சாதாரணமான முறையில் பாகிஸ்தான் அணியை வென்று விட்டது.
சூப்பர் ஸ்டாரின் மோசமான நாள்
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது சுற்றுப் போட்டியில் முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும்பொழுது இந்திய அணியை எளிமையான மூன்று கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டது. இதன் காரணமாகவே அவர்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. முதல் 10 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்தார்கள்.
மேலும் உலகின் தலைசிறந்த பவுலர் பும்ரா நான்கு ஓவர்கள் பந்து வீசி 45 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அரிதாக நிகழ்ந்த இந்த சம்பவத்தின் காரணமாக பாகிஸ்தான் அணியால் 171 ரன்கள் எடுக்க முடிந்தது. இந்திய அணி ஒட்டுமொத்தமாக முதல் பாதியில் மிகவும் மோசமான முறையில் செயல்பட்டிருந்தது. ஆனால் பேட்டிங்கில் சாதாரணமாக விளையாடி வென்று விட்டது.
மோசமான நாளிலும் வெல்லும்
இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் பொழுது ” இந்தியா அன்றைய போட்டி நாளில் சிறப்பாக இல்லை என்பது தெளிவானது. ஏனென்றால் பும்ரா மாதிரியான ஒரு வீரர் அதிகபட்ச ரன்களை கொடுத்திருந்தார். கற்பனை செய்து பாருங்கள் இது அடிக்கடி நடக்காத விஷயம். மேலும் இந்தியா மூன்று கேட்ச் வாய்ப்புகளையும் இழந்தது. இதையெல்லாம் மீறி இந்திய அணி வெகு எளிமையாக வென்று விட்டது”
இதையும் படிங்க : இந்திய அணியை பத்தி எந்த கவலையும் இல்ல.. நீங்க ஹைப் ஏத்தாதீங்க – பங்களாதேஷ் மெகதி ஹசன் எச்சரிக்கை
“அந்த குறிப்பிட்ட போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடாத போது கூட பாகிஸ்தானை வென்ற விதத்தில் தாங்கள் எந்த அளவுக்கு சிறந்தவர்கள், மேலும் டி20 கிரிக்கெட்டில் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறோம் என்பதை காட்டி இருக்கிறார்கள். ஏனென்றால் பாகிஸ்தான் அணியை பார்க்கும் பொழுது அந்த அளவுக்கு திறமையும் ஆழமும் இல்லை. மிக மோசமான நாளிலும் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வெல்லும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.






