இந்திய அணியை பத்தி எந்த கவலையும் இல்ல.. நீங்க ஹைப் ஏத்தாதீங்க – பங்களாதேஷ் மெகதி ஹசன் எச்சரிக்கை

0
203
ICT

நடப்பு ஆசியக் கோப்பையில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் நாளை மோதிக்கொள்ள இருக்கும் நிலையில் அந்த அணியின் வீரர் மெகதி ஹசன் இந்தியா போட்டி குறித்த கவலை எதுவும் இல்லை என தெரிவித்திருக்கிறார்.

பங்களாதேஷ் அணி இரண்டாவது சுற்றில் முதல் போட்டியில் இலங்கை அணியை வென்று இருக்கிறது. இதே போல இந்திய அணி தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்று இருக்கிறது.

- Advertisement -

பைனலுக்கான வாய்ப்பு

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் தங்களது முதல் போட்டியில் வென்று இருக்கின்ற காரணத்தினால், நாளை நடைபெறும் போட்டியில் இரு அணிகளில் எந்த அணி வெல்லுமோ அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நாளை இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது. இந்த நிலையில் பங்களாதேஷ் சிறிய அணி இந்திய அணி வெகு சுலபத்தில் வென்று விடும் என்று கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பங்களாதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் மெகதி ஹசன் பேட்டியளித்திருக்கிறார்.

- Advertisement -

கவலை கிடையாது

இதுகுறித்து மெகதி ஹசன் கூறும் பொழுது ” ஒரு போட்டியில் வென்ற பிறகு கிடையாது, நாங்கள் தொடக்கத்தில் இருந்தே சாதாரணமாகத்தான் இருக்கிறோம். எங்கள் உடல் மொழி எப்படி இருக்கிறது என்பது வரை நாங்கள் எதையும் பெரிதாக யோசிப்பது கிடையாது. நாங்கள் ஒரு கிரிக்கெட் போட்டியை விளையாட வெளியே செல்கிறோம் எங்களுடைய எதிரணி இந்தியா அல்லது ஆஸ்திரேலியா யாராக இருந்தாலும், அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை”

இதையும் படிங்க : என் மகன் அபிஷேக்குக்கு யுவராஜ் சிங் சொன்ன மந்திரம் இதுதான்.. கில் வெறும் பார்ட்னர் மட்டுமில்ல – தந்தை பேட்டி

“நீங்க எல்லாமே போட்டியின் சூழ்நிலையை பொறுத்துதான் அமைகிறது. பெரிய அணி சிறிய அணி என்று கிடையாது. நாங்கள் இதைப் பற்றி எல்லாம் யோசிப்பது கிடையாது. மீடியாக்கள் நீங்களும் ரசிகர்களும் இப்படியான பிம்பத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். நாங்கள் ஒரு சர்வதேச போட்டியை விளையாடுவதாகத்தான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -