இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான எனது அணியில் ஜடேஜா இல்லை – மஞ்ரேக்கர் வெளியிட்ட அணி

0
312
Sanjay Manjrekar

இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஆடி முடித்த பின்பு, தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. நான்கு நாட்கள் வரை மிகவும் சுவாரசியமாக சென்ற டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி, கடைசி நாள் மழை காரணமாக ஒரு பந்தும் வீசாத நிலையில் டிராவில் முடிந்தது. அடுத்த ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் என்னவெல்லாம் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். அது போலவே, முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கரும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான அணி இப்படி இருக்க வேண்டும் என்று தனது அணியை முன் வைத்துள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான மஞ்ரேக்கர் வெளியிட்ட அணி

அதில் துவக்க வீரர்களாக ரோகித் மற்றும் ராகுல் உள்ளனர். இருவருமே சிறப்பாக முதல் டெஸ்ட்டில் ஆடினர். மூன்றாம் இடத்தில் புஜாரா, நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்துக்கு முறையே கோலி மற்றும் ரஹானே ஆட வேண்டும் என்றும் கூறியுள்ளார் மஞ்ரேக்கர். மேலும் இந்த மூவர் தற்போது சிறந்த ஃபார்மில் இல்லாததால் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

Ravindra Jadeja Test Cricket

பேட்டிங் தான் சரியில்லை என்பதால் ஆறாவது இடத்தில் விஹாரி ஆட வேண்டும் என்று கூறியுள்ளார். ஏழாவது இடத்தில் ரிஷப் பண்ட் ஆடி அடுத்த நான்கு இடங்களில் பந்து வீச்சாளர்கள் ஆட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக தனது அணியில் ஜடேஜாவுக்கு இடமில்லை என்றார். முதல் டெஸ்ட்டில் அற்புதமாக ஆடி அரை சதம் கடந்த போதும் ஜடேஜாவுக்கு இடம் அளிக்காதது அதிர்ச்சி தருகிறது என்று பலரும் இதை விமர்சித்துள்ளனர்.

மேலும் அவர் கூறுகையில் அஷ்வினை தவறுதலாக வெளியே உட்கார வைத்து விட்டார்கள். எனது அணியின் நான்கு பந்து வீச்சாளர்களில் அஷ்வினும் ஒருவர். மீதம் மூன்று இடங்களில் சிராஜ், பும்ரா மற்றும் ஷமி இருப்பர் என்று கூறியுள்ளார் மஞ்ரேக்கர்.

இரண்டாம் ஆட்டத்திற்கு மஞ்ரேக்கர் அணி – ரோகித், ராகுல், புஜாரா, கோலி, ரஹானே, விஹாரி, பண்ட், அஸ்வின், ஷமி, பும்ரா, சிராஜ்.