கோலி கிடையாது.. இவர் தான் இந்திய அணியின் சிறந்த வீரர்.. மீடியாக்கள் திருந்துங்க – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

0
290
Virat

தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டிஸ் மட்டும் அல்லாமல் அமெரிக்காவிலும் சேர்த்து நடத்தப்பட்டு வருவது நமக்கு தெரிந்ததே. அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்க்கும் விதமாக ஐசிசி இந்த முயற்சியை எடுத்திருக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் வாரியமும் முக்கிய பங்கைக் கொண்டு இருக்கிறது.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு பெரிய அணிகளை அங்கு டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்க ஐசிசி விரும்பியது. இதற்காக இந்திய அணிக்கு அமெரிக்காவில் முதல் சுற்றில் நான்கு போட்டிகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியும் அமெரிக்காவில்தான் நடந்து முடிந்தது.

- Advertisement -

இப்படி ஐசிசியின் முயற்சியில்இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய பங்கு இருக்கிறது. போலவே அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்க்கும் முயற்சிக்கு போஸ்டர் பாயாக விராட் கோலி இருந்து வருகிறார். உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் அவருடைய பங்கும் இதில் மிக முக்கியமானதாக இருக்கிறது.

இதுவரையில் உலகக் கோப்பையை பொறுத்த வரையில் பாகிஸ்தானுக்கு எதிராக மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்த விராட் கோலி, நேற்று முன்தினம் நடந்து முடிந்த போட்டியில் முதல்முறையாக ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். மேலும் டி20 உலக கோப்பையில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் அவர் வெளியேறுவது இந்த முறைதான் நடந்தது.

அதே சமயத்தில் இந்தியா 119 ரன்கள் மட்டும் எடுக்க பும்ரா பந்துவீச்சில் அபாரமாகச் செயல்பட்டு பாகிஸ்தான் அணி 113 ரன்களில் நிற்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார். தனி ஒரு வீரராக ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பி இறுதியில் வெற்றி பெற்றும் கொடுத்தார். இந்த நிலையில் விராட் கோலி இந்தியாவின் சிறந்த வீரர் இல்லை பும்ராதான் சிறந்த வீரர் என மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : அம்பயரும் கிரிக்கெட் விதியும் சேர்ந்து எங்கள தோக்க வச்சுட்டாங்க.. பங்களாதேஷ் வீரர் குற்றச்சாட்டு

இதுகுறித்து அவர் செய்துள்ள ட்வீட்டில் “விராட் & கோ மீது மீடியாக்கள் வெறித்தனமாக இருந்த பொழுது, பும்ரா மிக அமைதியாக ஒற்றைக் கையால் இந்திய அணிக்கு பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியை வென்று கொடுத்தார். சில காலமாக அவர்தான் இந்திய அணியின் சிறந்த வீரராக இருந்து வருகிறார்” என்று கூறியிருக்கிறார். தற்பொழுது இது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.