“18 மாதங்களுக்கு முன்பு அவர் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததாக நாங்கள் நினைத்தோம் ஆனால்…” – சஞ்சய் மஞ்ரேக்கர் ஆச்சரியம்!

0
288
Sanjay manjrekar

கடந்த ஆண்டு யு.ஏ.இ-ல் நடந்த டி20 உலகக்கோப்பையோடு விராட் கோலி தனது டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகினார். பின்பு ஒருநாள் போட்டி கேப்டன் பதவியிலிருந்து பிசிசிஐ அவரை நீக்கி அறிவித்தது. இந்திய கிரிக்கெட்டில் அதுவொரு மிகக் குழப்பமான காலக்கட்டம்!

இதையடுத்து இந்திய அணி ஏறக்குறைய மொத்தமாக மாற்றப்பட்டது. மாற்றங்கள் இப்போது வரை தொடர்கிறது, புதிய கேப்டனாக ரோகித் சர்மாவும், புதிய தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் வந்தார்கள். அணி ஊழியர்கள் வரையிலும் மாற்றங்கள் இருந்தது. தற்போது கூட 2011 ஆம் ஆண்டு மனநலக் கட்டுப்பாட்டு ஆலோசகர் பேடி உம்டன் மீண்டும் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் பேட்ஸ்மேன்கள் தைரியமான அணுகுமுறையில் விளையாடததுதான். இதனால் ரோகித் சர்மா கேப்டன் ஆனதும் தாக்குதல் பாணி பேட்டிங்கில் கடைப்பிடிக்கப்பட்டது!

மேலும் புதியதொரு இந்திய அணியைக் கட்டுவதில் மிக உறுதியாக இருந்த பிசிசிஐ, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ராகுல் திரிபாதி, ரவி பிஷ்னோய், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. மேலும் தினேஷ் கார்த்திக், ஆர்.அஷ்வின் போன்ற மூத்த வீரர்களையும் திரும்ப அழைத்து வந்தது!

இந்த நிலையில் ஒரு அதிசயம் போல் நிகழ்ந்தது மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வருகைதான். அவரை நம்பி ஆதரித்த இந்திய அணி நிர்வாகமும் இந்த இடத்தில் பாராட்டுக்குரியது. காயங்களால் பவுலிங் பார்மை இழந்திருந்த புவனேஷ்வர் குமாரின் கிரிக்கெட் வாழ்க்கை கடந்த டி20 உலகக்கோப்பையோடு முடிந்து விட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் அவர் மீண்டு எழுந்து வந்து தற்போது முன்பை விட சிறப்பாய் நிற்பது பேரதிசயமாகவே இருக்கிறது!

- Advertisement -

தற்போது இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர் பேசியிருக்கிறார். அதில் அவர் “புவனேஷ்வர் குமார் தற்போது ஒரு பேட்டி அளித்தார். தற்போது அவர் உச்சக்கட்ட பவுலிங் பார்மில் இருக்கிறார். பதினெட்டு மாதங்களுக்கு முன்பு அவர் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததாக நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர் சிறப்பாகத் திரும்பி வந்து, தற்போது டி20 உலகக்கோப்பை அணியிலும் இடம்பெற போவது உறுதி. பல வீரர்களுடன் போட்டியில் நீங்கள் இருக்கும் போது, விளையாடுவது ஒன்றே சரியான வழி என்று புவனேஷ்வர் குமார் தெரிவித்திருந்தார். அதைத்தான் அவர் செய்திருக்கிறார். அவர் உலகக்கோப்பை அணியில் இடம் பெறட்டும்” என்று தெரிவித்தார்!