ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுரை கூறியிருக்கிறார்.
இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்து அதிர்ச்சி கொடுத்தது. மிகப்பெரிய தோல்விக்கு அடுத்து ஆஸ்திரேலியா வந்திருப்பதால் இந்திய அணியின் தன்னம்பிக்கை அளவு குறைவாக காணப்படுகிறது. இதன் காரணமாக பயிற்சியை மிகவும் மறைமுகமாக மேற்கொண்டு வந்தது.
ரவி சாஸ்திரிக்கு கிடைத்த பெரிய பெருமை
இந்திய அணி இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. ஒருமுறை கேப்டன் விராட் கோலி தலைமையிலும் இன்னொரு முறை கேப்டன் ரகானே தலைமையிலும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இரண்டு முறையும் வேறு வேறு கேப்டன்கள் இருந்தார்கள்.
ஆனால் இந்த இரண்டு முறை இந்திய அணி ஆஸ்திரேலியாலில் டெஸ்ட் தொடரை வென்ற பொழுதும் ரவி சாஸ்திரியே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தார். இரண்டாவது முறை இளம் வீரர்களை நம்பிக்கை கொடுத்து பயிற்சி அளித்து தொடரை வென்றார். அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 36 ரன்னில் ஆல் அவுட் ஆகி மீண்டு வந்த தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
கம்பீர் இதை செய்ய வேண்டும்
கம்பீருக்கு அறிவுரை கூறிய ரவி சாஸ்திரி தெரிவிக்கும் பொழுது “கம்பீர் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வெளியில் இருந்து வரும் சத்தங்கள் அவரை எந்த நிலையிலும் பாதிக்க கூடாது. உங்கள் வீரர்களை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பார்ப்பீர்கள். அவர்கள் கிளிக் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். ஒரு குறிப்பிட்ட வீரர் மற்ற எல்லோரையும் விட சிறந்த இருக்கும் அணியின் சூழலை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்”
இதையும் படிங்க : விராட் பாய் என்னை இதை செய்ய சொல்லி இருக்கார்.. அதுக்காக இப்படி தயாராகிட்டு வரேன் – ஜெய்ஸ்வால் பேட்டி
“ஆரம்பத்தில் இந்திய வீரர்களை புரிந்து கொள்ள எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. வீரர்கள் வெவ்வேறு கலாச்சார பின்னணி மற்றும் மனநிலைகளில் இருந்து வருகிறார்கள். எனவே அவர்களை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் அவர்களை வெளியில் தள்ளி நம்பிக்கை கொடுத்தால் மேட்ச் வின்னர் ஆக கொண்டு வர முடியும். உங்களால் தொடரை வெல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.






