இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோற்றது பிரச்சனை கிடையாது எனவும் அதற்கான காரணம் குறித்தும் மிக விளக்கமாக பேசியிருக்கிறார்.
நியூசிலாந்தின் இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று என வென்றது. இதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அணியாக கணக்கிடப்படும் இந்திய அணி குறித்து சந்தேகங்கள் பலமாக எழுப்பப்பட்டு வருகிறது.
இது முக்கியமே கிடையாது
இந்திய முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் இந்திய அணியின் தோல்வி குறித்து பரவலாக விமர்சனம் செய்து ஆலோசனை சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்த தோல்வி ஒரு பிரச்சினையே கிடையாது எனக்கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் பொழுது “தற்போது இந்திய அணி நியூசிலாந்து அணி இடம் ஒருநாள் தொடரில் தோற்றது ஒரு பிரச்சினையே கிடையாது. ஏனென்றால் இன்றைய ஒருநாள் கிரிக்கெட்டில் உலகக் கோப்பை மட்டுமே முக்கியமானது. சாம்பியன்ஸ் டிராபி கூட முக்கியம் கிடையாது. கடைசி 3 சாம்பியன்ஸ் டிராபியில் வென்றவர்கள் யார் என்று யாருக்கும் ஞாபகத்தில் இருக்காது. ஆனால் இதுவே உலகக்கோப்பையாக இருந்தால் நீங்கள் ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள்”
இதையெல்லாம் அகற்றி விடுங்கள்
“உங்களுடைய மோசமான செயல்பாடுகள் தோல்விகள் இதையெல்லாம் உங்களுடைய சிந்தனையில் இருந்து அகற்றி விடுங்கள். நீங்கள் ஏற்கனவே உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று விட்டீர்கள். எனவே மற்ற போட்டிகள் எல்லாமே பயிற்சி போட்டிகள் போலத்தான். அதைப் பற்றி பெரிதாக கவலைப்படக்கூடாது”
இதையும் படிங்க : முதல் டி20.. ஸ்ரேயாஸ் எங்களுக்கு வேணாம்.. இவரைத்தான் ஆட வைப்போம் – கேப்டன் சூரியகுமார் திட்டவட்டம்
” உண்மையில் இந்த இரு நாட்டு ஒருநாள் தொடருக்கு மதிப்பு என்னவென்றால், சில வாரங்கள் கழித்து எந்த நாட்டு ரசிகரும் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப் போவது கிடையாது. இது மொத்தமாக உலகக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை பார்ம் பற்றியது மட்டுமே. இதுவெல்லாம் உலகக் கோப்பையை யார் வெல்லப் போகிறார்கள்? என்பதை தீர்மானிக்காது” என்று கூறியிருக்கிறார்.






