முதல் டி20.. ஸ்ரேயாஸ் எங்களுக்கு வேணாம்.. இவரைத்தான் ஆட வைப்போம் – கேப்டன் சூரியகுமார் திட்டவட்டம்

0
16
Surya

நாளை நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் மூன்றாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட வைக்கப்பட மாட்டார் என இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.

தற்போது இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை நாக்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

திலக் வர்மா காயம்

தற்போது இந்திய டி20 அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் திலக் வர்மா காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. எனவே அவர் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் அவருடைய இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார்.

அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறவில்லை. எனவே திலக் வர்மா இடத்தை அவருக்கு கொடுக்க வேண்டாம் என இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்து முடிவு செய்திருக்கிறது. மேலும் மூன்றாவது இடத்தில் டி20 உலக கோப்பை அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக இடம் பெற்று இருக்கும் இஷான் கிஷானை விளையாட வைக்க முடிவு செய்திருப்பதாக சூரியகுமார் கூடியிருக்கிறார்.

- Advertisement -

இதுதான் எங்கள் முடிவு

இது குறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது “ஸ்ரேயாஸ் ஐயரை விளையாட வைக்க மாட்டோம். நாங்கள் மூன்றாவது இடத்தில் இஷான் கிஷானை விளையாட வைக்க போகிறோம். நாங்கள் அவரையே முதலில் தேர்வு செய்தோம். மேலும் அவர் டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம் பிடித்திருக்கிறார். அதனால் அவர் விளையாடுவதற்கு தகுதியானவர். மேலும் அவர் சில காலமாக இந்திய அணிக்கு விளையாடாமல் இருக்கிறார்”

இதையும் படிங்க : ஹர்ஷித் ராணாவை மோசமா பேசிட்டோம்.. அந்த பையன் பண்ண டெம்ப்ளேட் வேற மாதிரி இருக்கு – இந்திய முன்னாள் வீரர் பாராட்டு

“நான்காவது அல்லது ஐந்தாவது இடத்திற்கான வீரர் இல்லை என்றால் நாம் வேறு விதமாக யோசித்து இருக்கலாம். தற்போது துரதிஷ்டவசமாக திலக் வர்மா இல்லாமல் இருக்கிறார். காயம் என்பது விளையாட்டின் ஒரு பகுதி. நாம் அதற்கு எதுவும் செய்ய முடியாது. நாங்கள் வெளிப்படையாகவே திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தரை இழக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -