ரோகித் தோனியை பார்த்து கேப்டனா இத கத்துக்கோங்க.. இன்னைக்கு தப்பு செஞ்சிட்டிங்க – மஞ்சரேக்கர் விமர்சனம்

0
101
Dhoni

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு குறிப்பிட்ட விஷயத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோணியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வெறும் 46 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது. இந்திய அணி 356 ரன்கள் பின்தங்கி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.

- Advertisement -

போட்டியை மாற்றிய ரவீந்திரா மற்றும் சவுதி

நேற்று ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 233 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனவே இந்திய அணி நியூசிலாந்து அணியை சீக்கிரத்தில் கட்டுப்படுத்தி இந்த போட்டியை வெல்லக்கூடிய இடத்திற்கும் செல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படியான நிலையில் ரச்சின் ரவீந்தரா மற்றும் டிம் சவுதி இருவரும் இணைந்து அதிரடியாக 132 பந்துகளில் 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இது இந்திய அணிக்கு இந்த போட்டியில் பெரிய பின்னடைவை தற்பொழுது உருவாகி இருக்கிறது. இதன் காரணமாகவே நியூசிலாந்து அணி இந்திய அணியை விட 356 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

தோனியை பார்த்து ரோகித் கற்றுக்கொள்ள வேண்டும்

இந்த நிலையில் இந்த குறிப்பிட்ட பார்ட்னர்ஷிப்பை பிரிப்பதற்கான முயற்சியில் ரோகித் சர்மா சரியாக ஈடுபடவில்லை எனவும், கேப்டனாக தோனியை பார்த்து இந்த விஷயத்தில் ரோகித் சர்மா கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: 402 ரன்கள் ரச்சின் ரவீந்தரா அதிரடி சதம்.. இந்திய அணி வெல்ல வாய்ப்புகள் என்ன?.. பெங்களூர் முதல் டெஸ்ட்

இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “எதிரணி பேட்ஸ்மேன் சேதத்தை உருவாக்குவதற்கு முன்பாக சுதாரித்து பந்துவீச்சாளர்களை மாற்றி பயன்படுத்தி அதைக் கட்டுப்படுத்தும் திறமை கேப்டனாக தோனி இடம் அதிகமாக இருந்தது. கேப்டனாக ரோஹித் சர்மா தோனியிடமிருந்து இதை கற்றுக் கொள்ள வேண்டும். இன்று இதைச் செய்ய ரோகித் சர்மா தவறிவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -