தற்போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ரன்கள் முன்னிலை பெற்று மிக வலிமையாக இருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் பண்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். வானம் மேகமூட்டமாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. மேலும் ஆடுகளம் இரண்டு நாட்களாக மூடி வைக்கப்பட்டு இருந்ததால் ஈரப்பதமாகவும்இருந்தது.
92 வருட வரலாற்று மோசமான சாதனை
இந்த நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வெறும் 46 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த ரன்னை எடுத்து ஆல் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்தது.
இந்த நிலையில் நேற்று நியூசிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸ் விளையாடி மூன்று விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. அபாரமாக விளையாடிய துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே 105 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அமர்க்களப்படுத்திய ரச்சின் ரவீந்தரா
இன்று தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணிக்கு இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா அபாரமாக விளையாடினார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய இரண்டாவது சதத்தை அடித்தார். கடைசி விக்கெட்டாக வெளியேறிய அவர் 157 பந்துகளில் 134 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் 3 விக்கெட் கைப்பற்றினார்கள். தற்போதைக்கு நியூசிலாந்து அணி இந்திய அணியை விட 356 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இப்போதைக்கு இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெல்வதற்கே 90 சதவீத வாய்ப்புகள் இருக்கிறது.
இதையும் படிங்க : 1348 நாட்கள்.. இரண்டே பவுலர்களிடம் வீழ்ந்த இங்கிலாந்து.. பாகிஸ்தான் அணி அபார வெற்றி.. முல்தான் இரண்டாவது டெஸ்ட்
இந்திய அணி வெற்றிக்காக ஏதாவது போராட வேண்டுமென்றால் 500 ரன்கள் ஆவது எடுக்க வேண்டும். இல்லை இந்த போட்டியை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால் கடைசி நாளில் தேநீர் இடைவேளை வரையில் விளையாட வேண்டும். எனவே இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது.






