இனி ரிஷப் பண்ட் வெளியில்தான்.. காரணம் கேஎல்.ராகுல் இல்லை இவர்தான்.. பாவமா இருக்கு – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேட்டி

0
460
Manjrekar

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நட்சத்திர இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் வெளியில் உட்கார வைக்கப்பட்டு இருப்பதற்கான காரணம் குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விரிவாக பேசியிருக்கிறார்.

பொதுவாக ரிஷப் பண்ட் சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் மிக அருமையாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் என்றும், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் பொறுப்பெடுத்து விளையாடக்கூடிய அளவுக்கு ரிஷப் பண்ட் கிடையாது எனவும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடம் அவருக்கே திறமையின் காரணமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இனி இவர்தான் இருப்பார்

இப்படியான சூழ்நிலையில் முதன்மை விக்கெட் கீப்பராக கேஎல்.ராகுல் இருக்கின்ற காரணத்தினால்தான் ரிஷப் பண்ட் வெளியில் அமர வைக்கப்பட்டு இருக்கிறார் என்கின்ற கருத்து இருந்தது. ஆனால் உண்மையில் ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் இடம்பெறாததற்கான காரணம் வேறு ஒரு வீரர்தான் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பாக ரிஷப் பண்ட்டை வைத்து முயற்சி செய்து பார்ப்பார்கள் என்று நான் நினைத்தேன். இதன் மூலம் இந்திய பேட்டிங் வரிசையில் முதல் ஆறு இடத்தில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் வருவார். ஆனால் இந்திய அணி நிர்வாகம் இந்த இடத்திற்கு அக்சர் படேலை வைத்துக் கொண்டது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் செய்து நாம் பார்த்திருக்கிறோம். ஒரு பேட்ஸ்மேனாக அவரிடம் நல்ல மன உறுதி காணப்படுகிறது”

- Advertisement -

அக்சர் படேலின் சிறப்பு தகுதி

“அக்சர் படேல் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நல்ல முறையில் விளையாடினார். மிடில் ஓவர்களில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திறமையாக விளையாட நல்ல பேட்ஸ்மேன் இல்லாமல் இந்தியா போராடியது. இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் இடத்தை வைத்து பார்க்கும் பொழுது சுழல் பந்துவீச்சின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பது தெளிவாகிறது”

இதையும் படிங்க : ரோகித்தால் கம்பீர் பாவம்.. ரசிகர்கள் இனிமே இத மட்டும் செய்யாதீங்க – கபில்தேவ் கோரிக்கை

“அச்சர் படேல் மிடில் வரிசையில் ஒரு அற்புதமான ஆப்ஷன். இதன் காரணமாக ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் வருவதை தாமதப்படுத்தலாம். இப்போது இந்திய அணி நிர்வாகம் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய ஒரு இடது கை பேட்ஸ்மேன் கண்டுபிடித்துவிட்டது. இதன் காரணமாக ரிஷப் பண்ட்டின் தேவை இந்திய பிளேயிங் லெவனில் இல்லாமல் போய்விட்டது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -