இந்திய கிரிக்கெட்

தோல்விக்கு காரணம் தமிழக வாஷிங்டன் சுந்தர்தான்.. கடந்த 2 முறையும் இவர் மாதிரி இல்ல – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய பிளேயிங் லெவலில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னி மைதானத்தில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரை சமன் செய்வதுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய முறையில் சிட்னி ஆடுகளம்

ஆஸ்திரேலியாவில் பொதுவாக சிட்னி ஆடுகளம் மற்ற ஆடுகளங்களை விட ஓரளவுக்கு சுழல் பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பை தரக்கூடியதாக இருந்து வந்திருக்கிறது. மேலும் அங்கு முதல் மூன்று இன்னிங்ஸ்களில் பெரிய ரன்கள் கிடைக்கும். இதன் காரணமாக அங்கு கடைசி 7 போட்டிகளில் நான்கு போட்டிகள் டிராவில் முடிவடைந்திருந்தன.

இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வித்தியாசமாக வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான பச்சை ஆடுகளம் கொடுக்கப்பட்டது. இப்படி இருந்த பொழுதும் கூட இந்திய அணி இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுடன் சென்று விளையாடியது. ஜடேஜா அல்லது வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவருக்கு பதிலாக ஒரு முழு நேர பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் காரணம் கூறுகிறார்.

- Advertisement -

வாஷிங்டன் சுந்தர் தேர்வு தவறு

இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “முக்கியமான போட்டியில் இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு தேர்வை யோசிக்கும் பொழுது அது பைத்தியக்காரத்தனமானதாக இருக்கிறது. வாஷிங்டன் சுந்தர் அந்த அரை சதத்தை அடித்தது தவிர வேறு எந்த பெரிய ரன் பங்களிப்பும் செய்யவில்லை. அவர் திறமையான பந்துவீச்சாளர் என்று நினைக்கிறேன். அவருக்கு அதில் ஒரு இடம் இருக்கிறது. ஏற்கனவே ஜடேஜா இருக்கும் பொழுது அவரது தேர்வு தவறு என்று நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க : விராட் கோலி கிரிக்கெட்டை விட பெரிய ஆள் கிடையாது.. இத செய்ய கூட ஆள் வேணும் – யுவராஜ் சிங் தந்தை கருத்து

” கடந்த இரண்டு முறையும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி வெற்றி பெற்ற பொழுது, ஒருவருடைய ஒரு திறமை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அது சிறப்பாக இருக்கும் பட்சத்தில் தேர்வு செய்யப்பட்டார்கள். அவரிடம் இன்னொரு திறமை இருந்தால் அது போனசாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த முறை இந்திய அணி நிர்வாகம், இங்கிலாந்து அணி தோல்வி அடைந்து கொண்டிருக்கும் பொழுது ஆல் ரவுண்டர்களை தேர்வு செய்வது போல செய்து இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by