கம்பீர் பேச்சு நடத்தை சரியில்ல.. பிசிசிஐ அவரை இந்த வேலைக்கு மட்டும் விடாதிங்க – மன்ஞ்ரேக்கர் விமர்சனம்

0
115
Manjrekar

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீரின் பேச்சு மற்றும் நடத்தை சரியாக இல்லை என்றும் அதனால் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய அவரை பிசிசிஐ அனுமதிக்க கூடாது எனவும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட்டு தொடரில் விளையாடுவதற்கு இன்று இந்திய அணி ஆஸ்திரேலிய புறப்பட்டு சென்றது. இதற்கு முன்பான சம்பிரதாய பத்திரிக்கையாளர் சந்திப்பை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் எதிர் கொண்டு பல கேள்விகளுக்கு தன்னுடைய முறையில் அதிரடியாக பதில்களை கூறியிருந்தார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டுக்கும் ரிக்கி பாண்டிங்க்கும் என்ன சம்பந்தம்?

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விராட் கோலி கடந்த இரண்டு வருடங்களில் இரண்டு மூன்று டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்திருப்பதாகவும், அவர் வேறு ஒரு அணியில் இருந்தால் இந்நேரத்திற்கு நீக்கப்பட்டு இருப்பார் எனவும் விமர்சனம் செய்திருந்தார்.

இது குறித்து பதில் அளித்து இருந்த கம்பீர் அவருக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? அவர் தங்களின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பற்றி முதலில் பேசட்டும் என்று கடுமையான முறையில் பதிலடி கொடுத்திருந்தார். மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் உழைப்பு அவர்களின் ஆர்வத்தின் மீது தமக்கு மிகவும் நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

பிசிசிஐ இதை அனுமதிக்க வேண்டாம்

மேலும் கே.எல். ராகுல் போல வீரர் வேறு எந்த அணியில் வெளியில் இருக்கிறார்? என்றும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் தருவோம் என்றும் கூறியிருந்தார். அவருடைய பத்திரிகையாளர் சந்திப்பு வழக்கம் போல் அதிரடியாக அமைய அதற்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டும் வெளியில் இருந்து கிளம்பி இருக்கிறது.

இதையும் படிங்க : தோனி தூக்கும் 17 வயது மும்பை வீரர்.. சிஎஸ்கே அணிக்கு புதிய ஓபனர்.. சோதனை முகாம் புதிய தகவல்கள்

இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “நான் கம்பீர் பிரஸ் மீட்டை பார்த்தேன். அவரை இதுபோன்ற வேலைகளில் இருந்து விலக்கி வைப்பது பிசிசிஐ செய்யும் புத்திசாலித்தனமான வேலையாக இருக்கும். ஏனென்றால்அவருக்கு பத்திரிகையாளர்களை எதிர்கொண்டு சரியான முறையில் பேசவோ நடந்து கொள்ளவோ தெரியவில்லை. அவர் திரைக்குப் பின்னால் இருந்து மட்டும் வேலை செய்யட்டும். பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு ரோஹித் சர்மா மற்றும் அகர்கர் சரியானவர்களாக இருப்பார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -