தற்போது மும்பை மாநில அணியின் துவக்க ஆட்டக்காரர் ஒருவர் மகேந்திர சிங் தோனியை வெகுவாக கவர்ந்திருப்பதாகவும் இதன் காரணமாக சிஎஸ்கே சோதனை முகாமுக்கு அவர் அழைக்கப்பட்டிருக்கிறதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.
அடுத்த வருடம் ஐபிஎல் தொடர் மெகா ஏலத்துடன் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலம் இந்த ஆண்டு நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் சவுதி அரேபியா ஜெட்டா நகரில் நடக்கிறது. பாதி பணத்தை செலவு செய்துவிட்ட அணிகள் திறமையான இளம் வீரர்களை தேடி வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றன.
17 வயதான மும்பை வீரர்
நடப்பு ரஞ்சித் சீசனில் 17 வயதான தொடக்க பேட்ஸ்மேன் ஆயுஸ் மத்ரே 41 புள்ளி 14 ரன் ஆவரேஜ் உடன் மும்பை மாநில அணிக்காக 288 ரன்கள் எடுத்து சிறப்பான நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் இவர் அடுத்து டி20 வடிவத்தில் உள்நாட்டில் நடக்க இருக்கும் சையது முஸ்தாக் அலி டிராபிக்கு மும்பை 28 பேர் கொண்ட உத்தேச அணியிலும் இடம் பெற்று இருக்கிறார்.
மேலும் புனேவின் சவாலான ஆடுகளத்தில் மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் ஆயுஷ் மத்ரே 176 ரன்கள் குவித்தது சிஎஸ்கே ஸ்கவுட்டையும், தோனியையும் வெகுவாக கவர்ந்திருப்பதாகவும், இதன் காரணமாக சிஎஸ்கே சோதனை முகாமுக்கு ஆயுஸ் மதுரை அழைக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் உறுதியாக தெரிவிக்கின்றன.
தோனியின் சூப்பர் பிளான்
சிஎஸ்கே அணி தற்பொழுது வீரர்களை தக்க வைப்பதற்கு மொத்தம் 65 கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறது. இதன் காரணமாக சிஎஸ்கே அணி கையில் தற்பொழுது 55 கோடி ரூபாய் மட்டுமே பணம் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு யூனிட்டை வலிமையாக சில முக்கிய வீரர்கள் தேவைப்படுகிறார்கள்.
இதையும் படிங்க : ஹர்திக் இந்தியாவுக்காக ஆடுங்க ஐபிஎல்-காக ஆடாதிங்க.. உங்களுக்கு அவரே பரவால்ல – பாக் பசித் அலி விமர்சனம்
இதன் காரணமாக திறமையான இளம் வீரர்கள் சிலரை வாங்குவதின் மூலமாக பணத்தை மீதி செய்ய முடியும். அப்படி மீதி செய்யும் பணத்தை சர்வதேச அனுபவம் கொண்ட இரண்டு பெரிய வீரர்களின் மீது முதலீடு செய்ய முடியும். எனவே திறமையான இளம் வீரர்களை வாங்க தோனி மற்றும் சிஎஸ்கே ஸ்கவுட்திட்டமிட்டு இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தற்பொழுது மும்பை தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மத்ரே அழைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!