நேற்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 255 ரன்கள் குவித்து 55 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியிருக்கிறார்.
தற்போது 18 புள்ளிகள் உடன் ஆர்சிபி மற்றும் குஜராத் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. ஹைதராபாத் 18 புள்ளிகள் எடுத்து இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. குறைந்த ரன் ரேட் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தை தவறவிட்டிருக்கிறது.
பவுலிங் பலவீனம்
இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஹைதராபாத் அணியின் பௌலிங் மிகவும் பலவீனமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்களால் கணிக்கப்பட்டிருந்தது. உனன்கட் மற்றும் ஹர்ஷல் படேல் பவுலிங் யூனிட்டை பலவீனமாக காட்டினார்கள். மேலும் கம்மின்ஸ் ஆரம்ப போட்டிகளில் விளையாட வில்லை.
இளம் வீரர்கள் பிரபுல் ஹிங்ஜே மற்றும் சாகிப், இஷான் மலிங்கா ஆகியோர் அசத்தல் செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் தொடர் வெற்றிகள் பெற்று ஹைதராபாத் அணி இந்த நிலைக்கு மேலே வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாது என பலராலும் ஒதுக்கப்பட்டிருந்தது.
நான் கற்றுக் கொள்கிறேன்
இந்த வெற்றி குறித்து பேசி உள்ள பேட் கம்மின்ஸ் கூறும்போது “நாங்கள் இந்த ஸ்கோரை அடைந்தது எங்களுக்கு மிகவும் அருமையாக இருந்தது. எங்களுக்கு இந்த போட்டியில் பல விஷயங்கள் சாதகமாக நடந்து இருந்தது. மேலும் ஆர்சிபி அணியும் இந்த ஸ்கோரை துரத்துவதற்கு பல்வேறு வேலைகளில் ஈடுபட்டது. போட்டி கொஞ்சம் நெருக்கமாகவும் வந்தது. ஆனாலும் நாங்கள் இறுதியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது”
இதையும் படிங்க : ஹைதராபாத்தை ஜெயிக்கிறது எங்க ஐடியா கிடையாது.. நாங்க இதுக்காக தான் ஆடி வேலையை முடிச்சோம் – ரஜத் படிதார் பேச்சு
” எங்களுடைய பவுலிங் யூனிட் பற்றி சொல்வதாக இருந்தால் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் அவர்களிடம் இருந்து நான் கற்றுக் கொள்கிறேன். இந்த தொடரில் இஷான் மலிங்கா மெதுவான பந்துகள் மற்றும் வேரியேஷன்ஸ் உடன் பந்து வீசி சிறந்தவராக இருக்கிறார். இந்த பக்கம் சகிப் உசைன் அவரும் சிறந்த பவுலராக இருக்கிறார். இது ஒரு கேப்டனின் கனவு அணி” என்று கூறியிருக்கிறார்.






