ஆஸ்திரேலியாவிற்கு விமானம் ஏறும் போட்டியில் இந்த இந்திய வீரர் பின்தங்கி விட்டார் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் புதிய கருத்து!

0
150
Sanjay manjrekar

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ஐசிசி தொடரை கடைசியாக வென்றது 2013ஆம் ஆண்டுதான். இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி மகேந்திரசிங் தோனி தலைமையில் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. இதற்கு அடுத்து 9 ஆண்டுகள் கடந்தும், இந்திய கிரிக்கெட் அணி உச்சத்தில் இருந்தும். ஐசிசி கோப்பை என்பது கிட்டாத ஒன்றாகவே இருந்துவருகிறது!

மேலும் கடந்த ஆண்டு யுனைடெட் அரபு எமிரேட்டில் நடந்த 20 உலகக் கோப்பையில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து வெளியேறியது இந்திய அணியின் மீது மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. இதனால் ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் இல்லை ஐசிசி நடத்தும் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு இந்திய அணிக்குள் வேலைகள் நடைபெற்று வருகிறது!

- Advertisement -

இதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை எடுத்துக்கொண்டால், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமத் சமி, ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங் ஆகியோரை இந்திய அணியை பரிசோதித்து வந்தது. தற்போது ஆசிய கோப்பைக்கான அணியில் ஹர்சல் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயமடைந்த இருக்க, புவனேஸ்வர் குமார், ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

முகமது சமி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிய பந்தில் மிகப் பிரமாதமாக செயல்பட்டு இருந்தும், ஆசிய டி20 கோப்பைக்கான அணியில் அவர் தேர்வு செய்யப்படாதது பெரிய விவாதமாக மாறி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இருவரைப் பற்றி கூறியிருக்கிறார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும்பொழுது ” செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்காக, ஆஸ்திரேலிய விமானத்தில் வணிக வகுப்பில் இருக்கையை பெறுவதற்காக ஒரு நல்ல ஓட்டப்பந்தயம் நடந்து வருகிறது. இந்த ஓட்டப்பந்தயத்தில் அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கானை முந்திவிட்டார் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இதுபற்றி விளக்கமாக கூறிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ” இந்த ஓட்டப்பந்தயத்தில் ஆவேஸ் கான் சற்று பின்தங்கி இருக்கிறார். டி20 உலக கோப்பையில் வேகப்பந்து வீச்சாளர்க்களுக்கான இடத்திற்கான போட்டி நடந்து வருவது உங்களுக்கு தெரிந்ததுதான். இந்தப்போட்டியில் அர்ஸ்தீப் சிங் ஆவேஸ் கானை விட கொஞ்சம் முன்னணியில் இருக்கிறார். ஏனென்றால் புதிய பந்திலும், இறுதி கட்ட ஓவர்களிலும் அவர் அவரது வேலையை மிகச் சரியாகச் செய்கிறார். ஆவேஸ் கானும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு அங்கமாக இருப்பார் என்றுதான் நினைக்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார்!