தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் அப்போதைய இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை தனது பேட்டிங் மூலம் எப்படி ஈர்த்தார் என்பது குறித்து, அப்போது இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்திருக்கிறார்.
இளம் வீரராக கில் இருந்த பொழுதே அவருடைய பேட்டிங் பற்றி இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் நிறைய பேச்சுகள் இருந்தது. இதன் காரணமாகவே ராகுல் டிராவிட் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் திட்டங்களில் அவரை சேர்த்து அணிக்குள் கொண்டு வந்தார்.
அதுதான் முதல் பயிற்சி
இந்த நிலையில் ராகுல் டிராவிட்டுக்கு முன்பாகவே இந்திய தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியை தனது பேட்டிங் மூலமாக கில் எவ்வாறு ஈர்த்தார்? அப்போது யாரெல்லாம் இருந்தார்கள் என்பது குறித்து சஞ்சய் பாங்கர் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து சஞ்சய் பாங்கர் பேசும்பொழுது “அது அவரது முதல் வலை பயிற்சி அமர்வு. அப்போது ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். கேப்டனாக விராட் கோலி இருக்க, அதே அணியில் தோனியும் இருந்தார். நாங்கள் அப்போது 2019 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகிக் கொண்டு இருந்தோம். நாங்கள் கில்லுக்கு த்ரோ டவுன் செய்யும் பொழுது, அவர் சுலபமாக டிரைவ் ஆடிக் கொண்டிருந்தார்”
ரவி சாஸ்திரி பிரமித்து விட்டார்
“நாங்கள் ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் வீசினால் அவர் கட் அடித்தார். நாங்கள் கொஞ்சம் ஷார்ட்டாக வீசினால் அவர் சுலபமாக புல் அடித்தார். கில் விளையாடுவதை பார்த்த அனைவரும் தங்கள் பேட்டிங் பேச்சியை நிறுத்தி விட்டார்கள். அனைவரும் அவர் பேட்டிங் செய்வதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இவரால் எப்படி இப்படி விளையாட முடிகிறது என பேசிக் கொண்டார்கள்”
இதையும் படிங்க : ருதுராஜை இந்திய ஏ அணியில் சேர்க்காதது.. எந்த அநியாயமும் கிடையாது.. சரியான முடிவுதான் – ஆகாஷ் சோப்ரா பேச்சு
“கில் தன்னுடைய முதல் வலை பயிற்சியிலேயே முத்திரையை பதித்து விட்டார். அப்போதுதான் இந்த சிறுவன் மிகவும் தனித்துவம் ஆனவன் என்பதை நாங்கள் உணர்ந்தோம். மேலும் ரவி சாஸ்திரி அவரை பிளேயிங் லெவன்த் சேர்த்து விடலாம்” என்று கூறினார் எனத் தெரிவித்திருக்கிறார்.






