ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துலீப் டிராபியில் சதம் அடித்த போதும் ருதுராஜுக்கு வாய்ப்பு தராதது சரியான முடிவு தான் என ஆகாஷ் சூப்பரா கூறியிருக்கிறார்.
இந்திய ஏ அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற இரண்டு நான்கு நாள் டெஸ்ட் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய ஏ அணி வருகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதே சமயத்தில் ருதுராஜ் சேர்க்கப்படவில்லை.
ருதுராஜுக்கு எதிராக நடக்கவில்லை
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “சமீபத்தில் துலீப் டிராபியில் ஆகாஷ் சோப்ரா 184 ரன்கள் எடுத்தார். அவர் இந்திய ஏ அணிக்கு கேப்டனாக இருந்த பொழுது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு முன்பாக ரன்கள் எடுக்கவில்லை. அவர் இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணியில் இருந்தார் ஆனால் விளையாடவில்லை. அவர் இந்திய ஏ அணியில் அங்கும் இங்குமாக எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறார்”
“அவருக்கு எதிராக போகும் விஷயம் என்னவென்றால் அவரை விட மற்றவர்கள் சிறப்பாக விளையாடி வருவதுதான். இந்த வீரர்கள் எல்லோரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாட இந்தியாவுக்கு வருகிறார்கள். ஸ்ரேயாஸ் ஐயரை சேர்த்தால் இவரையும் சேர்க்க வேண்டும் என்று சொல்வது கண் பிரச்சனைதான். அதாவது உங்கள் பார்வை சம்பந்தப்பட்டது. எடுத்த ரன்கள் பற்றியது கிடையாது. ருதுராஜுக்கு எதிராக யாரும் எதையும் செய்யவில்லை”
சரியாக விளையாடவில்லை
“கடந்த முறை துலீப் டிராபியில் சராசரியாக 38 ரன்கள் எடுத்திருந்தார். இராணி கோப்பையிலும் அவர் சரியாக விளையாடவில்லை. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக கடந்த முறை ரன்கள் எடுக்கவில்லை. அவர் கடந்த இரண்டு ரஞ்சி சீசனில் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். அவர் அதிக கிரிக்கெட் விளையாடவில்லை”
இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் சாம்சனா ஜிதேஷ் ஷர்மாவா?.. பயிற்சியில் கம்பீர் கொடுத்த ரகசிய சிக்னல்.. முடிவுக்கு வரும் பிரச்சனை
“இன்னொரு பக்கம் ரஜத் பட்டிதார் சிறப்பாக விளையாடி ரன்கள் எடுத்த பொழுது இந்திய அணிக்கு கொண்டுவரப்பட்டார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவரால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. தற்பொழுது தேர்வாளர்களின் பேருந்து வேறு திசையில் செல்ல தொடங்கிவிட்டது. எனவே இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.






