நீங்க நினைக்கிற மாதிரிலாம் விராட் கோலி செய்ய முடியாது.. அவர் இப்படித்தான் போவார் – சஞ்சய் பாங்கர் பேட்டி

0
242
Virat

நடப்பு டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி எந்த இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும்? அவர் எப்படி விளையாட வேண்டும்? என்பது குறித்து நிறைய விவாதங்கள் வெளியில் சென்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஆர்சிபி அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி 15 போட்டிகளில் விளையாடி 741 ரன்கள் குறித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி இருந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் குறித்து நிறைய விமர்சனங்கள் கிளம்பி இருந்த நிலையில் எல்லாவற்றையும் முறியடித்து எப்பொழுதும் இல்லாத வகையில் 155 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

மேலும் தன்னுடைய பேட்டிங் அணுகு முறையில் ஸ்லாக் ஸ்வீப்பை கொண்டு வந்து இடது கை சுழல் பந்துவீச்சாளர்களை மிகச் சிறப்பான முறையில் விளையாடினார். அவருக்கு எந்த வகையான பந்துவீச்சில் பலவீனம் இருக்கிறது என்று கருதப்பட்டதோ அதை வெற்றிகரமாக முறியடித்து காட்டினார்

இதன் காரணமாக அவரை துவக்க இடத்தில் கொண்டு வர வேண்டும் என பல முன்னாள் வீரர்களும் கூறி வருகிறார்கள். அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறது போல அதிரடியாக விளையாடுவார் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க ஆடுகள சூழ்நிலைகள் அதிரடியாக விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து சஞ்சய் பாங்கர் கூறும் பொழுது “நீங்கள் எந்த அணிக்காக விளையாடினாலும் அதிக நேரம் விளையாடுகிறீர்கள் என்றால் அணியை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. எனவே விராட் கோலி அதிரடியாக விளையாடினாலும் இல்லை தன்னுடைய பாணியில் விளையாடினாலும் அணியை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. எனவே அவர் அதிரடியாக தான் விளையாடுவேன் என்று முடிவு செய்து களம் இறங்க முடியாது. போட்டியில் வெற்றி பெறவே கவனம் செலுத்துவார்.

இதையும் படிங்க : இந்திய அணி 200 ரன் அடிக்காது.. ரோகித் விராட் எண்ணம் இந்த மாதிரி தான் இருக்கும் – இர்பான் பதான் பேட்டி

டி20 உலகக் கோப்பை என்று மட்டும் இல்லாமல் மற்ற உலக கோப்பைகளிலும், விராட் கோலி தன்னுடைய பேட்டிங் தரத்தை உயர்த்தி இருக்கிறார். எனவே அவர் இந்த டி20 உலக கோப்பை தொடரிலும் மிகச் சிறப்பான முறையில் விளையாடும் பெரிய சாதனைகள் செய்வார் என நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -