தற்போது இந்திய அணிக்கு ஒரு கூடுதல் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர் தேவை என்றால் சாகலை புறக்கணித்துவிட்டு வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்வதற்கான காரணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் கூறியிருக்கிறார்.
இந்திய அணியில் தன்னை நிரூபித்த மணிக்கட்டு பந்துவீச்சாளராக சாகல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் தேர்வு செய்யாமல் திடீரென வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்தது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
சாகலின் எதிர்காலம் என்ன?
இதுகுறித்து பேசி இருக்கும் சஞ்சய் பாங்கர் கூறும் பொழுது “வருண் சக்கரவர்த்திக்கு டி20 கிரிக்கெட் ஏற்ற ஃபார்மேட். ஆனால் 50 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த சாதனை படைத்திருக்கும் சாகல் எதிர்காலம் என்ன? என்பதுதான் நம்முடைய கேள்வி. எனவே அணிக்கு இன்னொரு ரிஸ்ட் ஸ்பின்னர் தேவையென்றால், தேர்வாளர்கள் சாகல் பெயரை பரிசீலனை செய்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்”
“ஆனால் அணியின் விருப்பம் என்ன? அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? நிர்வாகம் எதை விரும்புகிறது என்பது குறித்து நாம் வெளியில் இருந்து கொண்டு கருத்து தெரிவிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். இருந்தாலும் கூட இது எல்லாம் சேர்ந்து தான் ஒரு வீரரின் தேர்வு விஷயத்தை முடிவு செய்கிறது”
வருண் சக்கரவர்த்தி தேர்வுக்கு காரணம் இதுதான்
“சாகல் இன்னும் சிறப்பான முறையில் பந்துவீசி வருகிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீண்ட வடிவ கிரிக்கெட்டில் நீங்கள் பேட்ஸ்மேன்களை காற்றில் ஏமாற்றக்கூடிய வகையில் சிறப்பானவராக இருக்க வேண்டும். ஆடுகளம் உங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் கூட நீங்கள் இதை செய்யக் கூடியவராக இருப்பது முக்கியம்”
இதையும் படிங்க : இங்கி முதல் ODI.. விளையாடாத விராட் கோலி.. காரணம் என்ன? 2 இளம் வீரர்கள் அறிமுகம்.. வெளியான தகவல்கள்
“எனவே சாகல் மற்றும் வருண் இருவரில் யாரை தேர்வு செய்வது என்பதில் நெருக்கமான முடிவுகள் இருந்திருக்கும். ஆனால் தற்போது சாகலை விட வரும் நல்ல ஃபார்மில் இருப்பார் என தேர்வாளர்கள் நினைத்திருக்க வேண்டும். மேலும் தாங்கள் நினைக்கும் வேலையை அவரால் செய்ய முடியும் என்றும் அவர்கள் கருதி இருப்பார்கள். அதனால் தேர்வு செய்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.






