இந்தியா மற்றும் ஆர்சிபி அணிகளின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி நான்காவது டெஸ்ட் போட்டியில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும்? என்பது குறித்து சில அறிவுரைகளை கூறியிருக்கிறார்.
தற்பொழுது விராட் கோலி முழுதாக பேட்டிங் ஃபார்மில் இல்லை என்று கூற முடியாது. ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்திருந்தார். மேலும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் அவரிடம் இருந்து ஒரு அரை சதம் வந்தது. எனவே அவருடைய பேட்டிங் ஃபார்ம் சரியாகவே இருக்கிறது. ஆனால் அவருடைய பேட்டிங் அணுகுமுறை தான் தவறாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சஞ்சய் பாங்கர் கூறும் பொழுது “சில நேரங்களில் ஒரு பேட்ஸ்மேன் ஆக நீங்கள் உங்களுடைய தலையை நிலையாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் விளையாட்டில் செட்டில் ஆக கொஞ்சம் நேரம் கொடுத்து ஆடுகளத்தில் தங்கி இருக்க வேண்டும். மேலும் பந்துவீச்சாளரிடம் நீங்கள் செல்லாமல் பந்துவீச்சாளர்களை உங்களிடம் வர வைக்க வேண்டும். இதுதான் பெரிய வீரரின் அடையாளம்”
“அடுத்து போட்டி நடைபெறும் சிட்னி மைதானத்தில் அவருக்கு நல்ல நினைவுகள் இருக்கிறது. இங்கு அவர் ஒரு போட்டியில் 169 ரன்கள் எடுத்தார். இங்கு பெரிய அளவில் மக்கள் போட்டியை பார்க்க வருவார்கள். விராட் கோலி ஒரு ஷோ மேன். அவருக்கு இப்படிப்பட்ட கூட்டம்தான் தேவை. எனவே தற்போது அவரது பொசிஷன் ஒரு கட்டுப்பாட்டில் இருக்கிறது”
“பந்தை உங்களுக்கு அருகில் நன்றாக வர விட்டு முன் காலின் பேடில் வைத்து விளையாடுங்கள். இதனால் உங்களுக்கு ரன்கள் நிறைய கிடைக்கும். மேலும் அவர் ரன்கள் எடுக்காமல் இல்லை. மூன்று இன்னிங்ஸ்களுக்கு முன்பாக ஒரு சதம் அடித்திருக்கிறார். மேலும் அவர் நியூசிலாந்துக்கு எதிராகவும் இந்தியாவில் ஒரு 70 ரன்களுக்கு மேல் எடுத்தார்”
இதையும் படிங்க : பண்ட் தப்பு பண்றாரு.. நான் சொல்ற மாதிரி செஞ்சா அதுல பெஸ்ட்டா வரலாம் – ஆஸி முன்னாள் வீரர் அறிவுரை
“எனவே இது அவருக்கு ஒரு ரன் வறட்சி என்று நான் சொல்ல மாட்டேன். இருந்தாலும் கூட அவர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். அவர் பந்தை கொஞ்சம் வர விட்டு நெருக்கமாக வைத்து விளையாட வேண்டும். அப்படி செய்தால் அவர் இதுவரை அவுட் ஆன விதங்கள் அத்தனையும் அளிக்கப்பட்டு விடும்” என்று கூறி இருக்கிறார்.