இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் பங்களிப்பு பெரிதாக இல்லை என்றாலும் கீப்பிங்கிலும் சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டார்.
இந்த சூழ்நிலையில் அது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயான் ஹீலி ரிஷப் பண்ட் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய அணியில் மீண்டும் ரிஷப் பண்ட்
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தின் காரணமாக சுமார் ஒரு வருட காலம் இந்திய அணியில் இருந்து விலகி இருந்தார். மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் மூலமாக மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிய நிலையில் டி20 உலக கோப்பை மூலமாக இந்திய அணியிலும் நுழைந்தார். டி20 உலக கோப்பையில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு இவரும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் எப்போதுமே சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் பண்ட் கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் மற்றும் தற்போது நடைபெறும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பேட்டிங்கில் சுமாரான பங்களிப்பை வெளிப்படுத்தி வருவது மட்டுமல்லாமல் கீப்பிங்கிலும் ஒரு சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயான் ஹீலி ரிஷப் பண்ட் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்த வேலையை அவர் செய்யலாம்
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ரிஷப் பண்ட் தற்போது தீவிர பயிற்சியில் இருக்கிறார். நான் அவரை காலையில் பார்த்தேன் மற்றும் அவர் செய்யும் பயிற்சிகளை விரும்பினேன். மேலும் அவர் முன்னேற வேண்டும். இந்தத் தொடரில் அவர் ஒரு சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டதைப் போல தொடக்கத்தில் ஒரு சறுக்கல் ஏற்படலாம். ஒரு சில விக்கெட் கீப்பர்கள் முதலில் இடது புறம் சற்று நகர்ந்து அதற்குப் பிறகு பந்து வரும் திசையை நோக்கி நகர்வார்கள்.
இதையும் படிங்க:நம்பிக்கை இல்லாம இருந்தேன்.. கம்பீர் கோச் ஆனதும் சொன்ன அந்த வார்த்தைதான் என்னை மாத்துச்சு – சாம்சன் பேட்டி
உங்களால் அப்படி முடியாவிட்டால் முதலில் அமைதியாக இருந்து அதற்குப் பிறகு உங்களது இயக்கத்தை விரைவாக துவங்க வேண்டும். அந்த தூண்டுதல் இயக்கத்தை விரைவாக தொடங்கி வந்து வரும் நேரத்திற்கு தகுந்தவாறு வலது பக்கத்தில் நகர்ந்து பின்னர் பந்து வரும் திசைக்கு நோக்கி செல்ல வேண்டும். இந்த இரண்டில் பண்ட் ஏதேனும் ஒரு விஷயத்தை தேர்வு செய்யலாம்” என்று கூறியிருக்கிறார். மேலும் பேட்டிங்கிலும் பண்ட் சொதப்பி வரும் நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.