கடைசி ஓவர் கடைசி பாலில் ராஜஸ்தானை ஜெயிக்க வைத்த ஹீரோ சந்தீப் சர்மா… தோனிக்கு ட்விட்டரில் வாழ்த்து சொன்னார்!

0
158

கடைசி ஓவர் கடைசி பந்தில் தோனியிடமிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு போட்டியை ஜெயித்துக்கொடுத்த சந்தீப் சர்மா, ட்விட்டரில் தோனிக்கு வாழ்ந்த சொல்லி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரின் 17ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக மோதின டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் அடித்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி இந்த ஸ்கோரை எட்டுவது சற்று கடினம் தான் என்றாலும், சிஎஸ்கே அணி நம்பிக்கையுடன் களமிறங்கியது.

நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. ருத்துராஜ் 8 ரன்களுக்கு அவுட் ஆனார். மறுமுனையில் கலக்கிய துவக்க வீரர் திவான் கான்வே 50 ரன்கள் அடித்த உடனேயே ஆட்டம் இழந்தார். இது சிஎஸ்கே அணிக்கு பெரிய சிக்கலை தந்துவிட்டது.

கடைசி மூன்று ஓவர்களில் 54 ரன்கள் தேவைப்பட்டபோது, தோனி கடைசி வரை போராடினார். இறுதியில் சிஎஸ்கே அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

பரபரப்பாக சென்ற கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. இதில் தோனி இரண்டு சிக்ஸர்கள் உட்பட 14 ரன்கள் அடித்து மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தார். கடைசியில் சந்திப் ஷர்மா யார்க்கர் வீசி நன்றாக கட்டுப்படுத்தியதால், ராஜஸ்தான் அணி வென்றது.

தோனிக்கு இது சிஎஸ்கே அணியின் கேப்டனாக விளையாடும் 200வது போட்டியாகும். இதில் தோல்வி பெற்றது ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தத்தை தந்திருக்கிறது. இதற்கு தோனி, “எந்தவித வருத்தமும் இல்லை. நான் போட்டிக்கு என்ன தேவை என்பதை மட்டுமே கவனம் செலுத்தி விளையாடி வருகிறேன்.” என்றார்.

தோனியின் 200வது போட்டிக்கு ட்விட்டர் பக்கத்தில் சந்திப் சர்மா வாழ்த்து தெரிவித்தது பலரையும் கவர்ந்திருக்கிறது. “தோனி அண்ணனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த சிறப்பான தருணத்தில் அவருடன் களத்தில் விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது. எனது கனவு நனவாகியது.” என்று பதிவிட்டிருந்தார்.