உலக கிரிக்கெட்

வெறும் 3 ரன்.. மும்பை இந்தியன்ஸ் மீண்டும் தோல்வி.. புள்ளி பட்டியலில் சிஎஸ்கேவின் டிஎஸ்கே பின்னடைவு.. எம்எல்சி 2024

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ யூனிகான் அணிகள் மோதிய போட்டியில் எம்ஐ அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.

- Advertisement -

சான் பிரான்சிஸ்கோ யூனிகான் அணி வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணியின் மற்றொரு அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது.

டல்லாசில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன் பிரான்சிஸ்கோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே ஏழு ஓவர்களுக்கு 33 ரன்கள் மட்டுமே குவித்து ஐந்து விக்கெட்டுகள் பறி கொடுத்த சான் ஃபிரான்ஸ்கோ அணிக்கு ஹாசன் கான் மற்றும் சிஜே ஆண்ட்ரசன் ஆகியோர் அருமையான பாட்னர்ஷிப் அமைத்து 58 பந்துகளுக்கு 87 ரன்கள் குவித்தனர். ஹாசன் கான் 35 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 44 ரன்கள் குவித்தார்.

மற்றொரு பேட்ஸ்மேன் ஆன சிஜே ஆண்டர்சன் 37 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 59 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடியால் சான் பிரான்சிஸ்கோ 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் குவித்தது. பின்னர் பேட்டிங் தொடங்கிய எம்ஐ நியூயார்க் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பிரேவிஸ் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 56 ரன்கள் குவிக்க, மற்ற பேட்ஸ்மேன்களில் ரிச்சர்ட் தவிர அனைவரும் பந்துகளை வீணடித்தனர்.

- Advertisement -

குறிப்பாக அதிரடி ஆட்டக்காரர் பூரான் 30 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு பவுண்டரிகள் அடித்து 26 ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற, கடைசி ஓவரில் எம்ஐ அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட, இறுதி ஓவரை வீசிய ஹாரிஸ் ராப், ரிச்சர்ட்ஸ் அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசினாலும் கடைசி பந்தில் ரிச்சர்ட்ஸ் ஆட்டம் இழந்ததால் எம்ஐ அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதனால் மூன்றாவது வெற்றியைப் பெற்ற சான் பிரான்சிஸ்கோ அணி தற்போது இரண்டாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஐந்து போட்டிகள் விளையாடியுள்ள சன் பிரான்சிஸ்கோ அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி மற்றும் ஒரு போட்டி டிரா என 7 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இதையும் படிங்க:கோலி பைனலில் என்கிட்ட இதைத்தான் சொன்னார்.. ஆனா வெளிய ஹர்திக் ஒன்னு சொல்லி அனுப்பினார் – அக்சர் படேல் பேட்டி

5 போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி, 2 டிரா என இருக்கும் சென்னை அணியின் மற்றொரு அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு கீழே இறங்கியுள்ளது. டெக்ஸாஸ் அணி மொத்தமாக ஆறு புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts