இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் அக்சர் படையல் பேட்டிங் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்தப் போட்டியில் பேட்டிங் செய்த பொழுது விராட் கோலி எப்படி தன்னை வழி நடத்தினார் என அக்சர் படேல் கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி பவர் பிளேவில் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அக்சர் படேலை ஐந்தாவது இடத்தில் களம் இறக்கினார்.
விராட் கோலி மற்றும் அக்சர் படேல் இருவரும் சேர்ந்து 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இதில் அக்சர் படேல் 31 பந்துக்கு 47 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு மெகா சிக்ஸர்கள் அடக்கம். இவர் பேட்டிங் செய்த விதம் இந்திய அணிக்கு பெரிய போனஸ் ஆக அந்த சூழ்நிலையில் அமைந்திருந்தது.
தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் அக்சர் படேல் கூறும்பொழுது “அன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் ஆட்டம் இழக்கும் பொழுது ரோகித் சர்மா என் அருகில் நின்று கொண்டிருந்தார். அவர் என்னிடம் பேட்டிங் செய்ய தயாராகும் படி கூறினார். மேலும் சாகல் வந்து நான் முன்கூட்டியே பேட்டிங் செய்ய வேண்டியது இருக்கும் என ராகுல் டிராவிட் கூறியதாக என்னிடம் சொன்னார்.
இதற்கு அடுத்து சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழக்க நான் உள்ளே அனுப்பப்பட்டேன். அப்பொழுது நான் மைதானத்திற்கு செல்லும் பொழுது வெளியில் அமர்ந்திருந்த ஹர்திக் பாண்டியா குஜராத்தி மொழியில் “பந்தை நன்றாக பார் பின்பு அடி” என்று கூறினார். நாங்கள் அப்பொழுது மூன்று விக்கெட்டுகளை இழந்து இருந்தோம். எனக்கு ஆடுகளம் எப்படி என்று பகுப்பாய்வு செய்வதற்கு நேரம் எல்லாம் இல்லை. நான் இது குறித்து யோசித்துக் கொண்டேதான் உள்ளே சென்றேன்.
இதையும் படிங்க: இலங்கைக்கு எதிரான டி20 தொடர்.. இந்தியா புறக்கணித்த டாப் 5 வீரர்கள்.. திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்கல
நான் எதிர்கொண்ட முதல் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தேன். நான் மிகவும் நம்பிக்கையுடனும் இருந்தேன். மேலும் நான் விராட் பாயிடம் பேசினேன் அவர் என்னை வழிநடத்திச் சென்றார். அவர் என்னிடம் ‘ ஒரு பந்தை உங்களால் அடிக்க முடியும் என்று நினைத்தால் நீங்கள் அந்த பந்துக்கு தாராளமாக செல்லுங்கள்’ என்று கூறினார். எங்களிடம் நல்ல தகவல் தொடர்பு இருந்தது. மீதி நடந்ததெல்லாம் வரலாறு” என்று கூறி இருக்கிறார்.






