“வழக்கம்போல் சாம்சன் சும்மாதான் இருக்கனும்; உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காது” – சூசகமாக தெரிவித்த இந்திய தேர்வுக்குழு முன்னாள் தலைவர்!

0
112
Samson

நேற்று வெஸ்ட் இண்டீஸ் எதிராக இந்தியா விளையாடும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பித்தது. நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது!

நேற்றைய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் வழக்கம் போல் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக வாய்ப்பு பெற்ற இசான் கிஷான் மீண்டும் வாய்ப்பு பெற்றார்.

- Advertisement -

அதே சமயத்தில் சஞ்சு சாம்சனை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக சூரியகுமார் யாதவுக்கு பதிலாக களம் இறக்கி பரிசோதிக்கவும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் விருப்பமில்லை என்று நேற்று தெரிந்தது. சூரியகுமார் யாதவே விளையாடும் அணியில் இடம் பெற்றார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவை விட மிகச்சிறந்த செயல்பாட்டை சஞ்சு சாம்சன் கொண்டிருக்கிறார்.

நேற்று வெஸ்ட் இண்டீஸ் குறைந்த ரன்களில் சுருண்ட காரணமாக இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக துவக்க ஆட்டக்காரராக இஷான் கிஷான் அனுப்பப்பட்டார். மேலும் மூன்றாவது வீரராக விராட் கோலிக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் அனுப்பப்பட்டார். இசான் கிஷான் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை அரை சதம் அடித்து பயன்படுத்திக் கொண்டார். அதேவேளையில் சூரியகுமார் யாதவ் 25 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த 19 ரன்கள் அவர் மூன்று பவுண்டரி ஒரு சிக்சர் மூலம் 18 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு இருக்காது என்பதை சூசகமாக இந்திய தேர்வு குழுவின் முன்னாள் தலைவர் சபா கரிம் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது
“இஷான் கிஷான் துவக்க வீரராக வருவார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவருக்கு துவக்க வீரராக வாய்ப்பு தரப்பட்டு உள்ளதை பார்க்கும் பொழுது, அது அவரது மதிப்பை அதிகரிப்பதாக இருக்கிறது.

கே எல் ராகுல் இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். மேலும் இசான் கிஷானை ஒரு பேக்கப் வீரராக பார்ப்பது அணிக்கு நல்ல நெகிழ்வு தன்மையை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.

மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யக்கூடிய ரிசர்வ் விக்கெட் கீப்பராக இஷான் கிஷானை நீங்கள் பார்க்கலாம். அதேபோல் அவர் உங்களுக்கு பேக்கப் ஓபனராகவும் ஆகவும் இருப்பார். இதன் காரணமாக நீங்கள் உங்களுடைய அணியில் ஒரு பேக்கப் துவக்க ஆட்டக்காரரை சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது.

15 வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டியது ஒரு சவாலான காரியமாக இருப்பதால், இஷான் கிஷானை கொண்டு வருவது பயனுள்ள விஷயமாக இருக்கிறது. அவர் களத்தில் நீண்ட நேரம் செலவிட்டு உள்ளதால், ஒரு பேட்டர் மற்றும் விக்கெட் கீப்பராக அவரது நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்!

இந்த வகையில் எடுத்துக் கொண்டால் இரண்டாவது விக்கெட் கீப்பராகவும், மூன்றாவது துவக்க ஆட்டக்காரர் ஆகவும் இசான் கிஷானுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் மிடில் ஆர்டர் பேக்கப் பேட்ஸ்மேன் ஆக சூரிய குமாருக்கு வாய்ப்பு கிடைக்கும். சஞ்சு சம்சனுக்கு இந்த இரண்டில் ஒரு வாய்ப்பு கூட உலகக்கோப்பை இந்திய அணியில் வழங்கப்படாது என்பது தற்போது தெளிவாக தெரிய வந்திருக்கிறது.