1 ஓவர் 39 ரன்.. யுவராஜ் சிங் சாதனையை உடைத்த வீரர்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புது ரெக்கார்டு

0
852
Visser

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2007 ஆம் ஆண்டு யுவராஜ் சிங் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்திருந்த சாதனையை, சமோவா அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் டேரியல் விஸ்ஸர் முறியடித்து அசத்தியிருக்கிறார்.

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. தற்போது இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதற்கான தகுதி சுற்று போட்டிகள் வெளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இப்படியான டி20 உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டி ஒன்றில் கிழக்கு பசிபிக் ஆப்பிரிக்காவில் வனுவாடு மற்றும் சமோவா அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில்தான் சமோவா அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் டேரியல் விஸ்ஸ்ர் வனுவாடு வேகப்பந்துவீச்சாளர் நளின் நிபிகோ வீசிய ஓவரில் 39 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்திருக்கிறார்.

இந்த ஓவரில் டேரியல் விஸ்ஸர் மொத்தம் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்தார். மேலும் இந்த ஓவரில் மொத்தம் மூன்று நோ-பால்கள் வீசப்பட்டது. இப்படி மொத்தமாக 39 ரன்கள் கிடைத்தது. இதன் மூலமாக யுவராஜ் சிங் முதன் முதலில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த சாதனையை சமோவா அணியின் டேரியல் விஸ்ஸர் முறியடித்திருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக யுவராஜ் சிங் 2007 ஆம் ஆண்டு, கீரன் பொல்லார்டு இலங்கைக்கு எதிராக 2021 ஆம் ஆண்டு, நிக்கோலஸ் பூரன் 2024 ஆம் ஆண்டு, நேபால் அணியைச் சேர்ந்த திபேந்திர சிங் ஐரி 2024ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 36 ரன்கள் எடுத்திருந்தார்கள். தற்போது இந்த மூவரின் சாதனையும் முறியடிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : 48 பந்தில் 124 ரன்.. இந்திய அணி திரும்ப பிளான் ரெடியா இருக்கு.. முச்சதம் அடித்த கருண் நாயர் பேட்டி

மேலும் இந்த போட்டியில் சமோவா பணியின் டேரியல் விஸ்ஸர் 62 பந்துகளில் 14 சிக்ஸர்கள் உடன் 132 ரன்கள் குறித்து அசத்தினார்.இவரது அதிரடியான ஆட்டத்தால் வனுவாடு அணியை சமோவா அணி வீழ்த்தியது. மேலும் 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளிலும் நீடிக்கிறது.

- Advertisement -