“ஒரே டீம்ஸ் ஒரே பிளேயர்ஸ்தான்.. ஆனா என்னால விளையாட முடியல.. ஸ்வீப் விளையாடாதது முதல்முறை!” – சூரியகுமார் யாதவ் ஓபன் பேட்டி!

0
9284
Surya

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூரியகுமார் யாதவ் மட்டுமே பிரச்சனையாக தெரிந்து கொண்டிருந்தார்கள்!

டி20 கிரிக்கெட் வடிவத்தில் உலகின் எந்த பந்துவீச்சாளர்களையும் விட்டு வைக்காத சூரியகுமார் யாதவ், ஒருநாள் கிரிக்கெட் வடிவம் என்று வரும் பொழுது, மிகவும் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு இடம் தர வேண்டும் என்று பரவலாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இப்படியான நிலையில்தான் இன்று மிக முக்கியமான போட்டியில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக, கே.எல்.ராகுல் உடன் இணைந்து 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். மேலும் தன் பங்குக்கு 49 பந்துகளில் 50 ரன்கள் அடித்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் அவருடைய வழக்கமான ஸ்வீப் ஷாட் விளையாடவில்லை. பந்தை நேராக விளையாட மட்டுமே செய்தார். மேலும் வெற்றி உறுதியான நிலையில்தான் அவருடைய வழக்கமான ஷாட்டுக்கு சென்றால். இன்று அவருடைய ஆட்டம் மிகவும் பொறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் இருந்தது.

- Advertisement -

போட்டியில் வெற்றிக்குப் பின் பேசிய சூரியகுமார் யாதவ் “நான் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விளையாட ஆரம்பித்த பொழுது, இப்படியான ஒரு இன்னிங்ஸை விளையாட கனவு கண்டேன். ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் சென்று முடித்து வைக்கும் நேரத்தில் துரதிஷ்டவசமாக இன்று நான் ஆட்டம் இழந்து விட்டேன். ஆனால் எனக்கு முடிவு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த வடிவத்தில் மட்டும் எனக்கு என்ன நடக்கிறது என்று நான் யோசித்துக் கொண்டே இருந்தேன். நான் சந்திக்கும் அணிகளும் பந்துவீச்சாளர்களும் ஒரே மாதிரியானவர்கள்தான். நான் இது குறித்து திரும்பி சென்று சிந்தித்தேன்.

நான் விஷயங்களை கொஞ்சம் அவசரமாக செய்வதை உணர்ந்தேன். எனவே மெதுவாக விளையாடி ஆழமாக எடுத்துச் செல்ல முடிவு செய்தேன். நான் ஸ்வீப் விளையாடாதது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்.

நான் நேராக விளையாடும் ஷாட்கள், சந்து பண்டிட் கலைப் பள்ளியில் இருந்து வந்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் பேட்டிங்கை மிகவும் ரசித்தேன். அதே வழியில் பேட்டிங் செய்யவும் ஆழமாக போட்டியை எடுத்துச் செல்லவும், கேம்களை இந்தியாவுக்காக வெல்லவும், விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்!
இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூரியகுமார் யாதவ் மட்டுமே பிரச்சனையாக தெரிந்து கொண்டிருந்தார்கள்!

டி20 கிரிக்கெட் வடிவத்தில் உலகின் எந்த பந்துவீச்சாளர்களையும் விட்டு வைக்காத சூரியகுமார் யாதவ், ஒருநாள் கிரிக்கெட் வடிவம் என்று வரும் பொழுது, மிகவும் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தார்.

இதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு இடம் தர வேண்டும் என்று பரவலாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இப்படியான நிலையில்தான் இன்று மிக முக்கியமான போட்டியில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக, கே.எல்.ராகுல் உடன் இணைந்து 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். மேலும் தன் பங்குக்கு 49 பந்துகளில் 50 ரன்கள் அடித்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் அவருடைய வழக்கமான ஸ்வீப் ஷாட் விளையாடவில்லை. பந்தை நேராக விளையாட மட்டுமே செய்தார். மேலும் வெற்றி உறுதியான நிலையில்தான் அவருடைய வழக்கமான ஷாட்டுக்கு சென்றால். இன்று அவருடைய ஆட்டம் மிகவும் பொறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் இருந்தது.

போட்டியில் வெற்றிக்குப் பின் பேசிய சூரியகுமார் யாதவ் “நான் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விளையாட ஆரம்பித்த பொழுது, இப்படியான ஒரு இன்னிங்ஸை விளையாட கனவு கண்டேன். ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் சென்று முடித்து வைக்கும் நேரத்தில் துரதிஷ்டவசமாக இன்று நான் ஆட்டம் இழந்து விட்டேன். ஆனால் எனக்கு முடிவு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த வடிவத்தில் மட்டும் எனக்கு என்ன நடக்கிறது என்று நான் யோசித்துக் கொண்டே இருந்தேன். நான் சந்திக்கும் அணிகளும் பந்துவீச்சாளர்களும் ஒரே மாதிரியானவர்கள்தான். நான் இது குறித்து திரும்பி சென்று சிந்தித்தேன்.

நான் விஷயங்களை கொஞ்சம் அவசரமாக செய்வதை உணர்ந்தேன். எனவே மெதுவாக விளையாடி ஆழமாக எடுத்துச் செல்ல முடிவு செய்தேன். நான் ஸ்வீப் விளையாடாதது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்.

நான் நேராக விளையாடும் ஷாட்கள், சந்து பண்டிட் கலைப் பள்ளியில் இருந்து வந்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் பேட்டிங்கை மிகவும் ரசித்தேன். அதே வழியில் பேட்டிங் செய்யவும் ஆழமாக போட்டியை எடுத்துச் செல்லவும், கேம்களை இந்தியாவுக்காக வெல்லவும், விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்!