போச்சா?.. “2வது டி20 போட்டியிலும் இதே நிலைமைதான்” – அபினவ் முகுந்த் இந்தியா அணிக்கு மெசேஜ்!

0
507
Abinav

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் மணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விளையாடி வருகிறது!

நேற்று முன்தினம் இந்த தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் நிலையில் இருந்து எதிர்பாராத விதமாக கடைசி நேர தவறுகளால் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

வருகின்ற ஆசியக் கோப்பை மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை மனதில் வைத்து இஷான் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சன் இருவருக்குமே விளையாடும் அணியில் வாய்ப்பு தரப்பட்டு இருந்தது. மேலும் திலக் வர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக முதல் முறையாக அறிமுகமானார்.

இதுகுறித்து தற்போது பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் “இந்தியாவின் பேட்டிங் என்னை பொறுத்தவரை டிரினிடாட் ஆடுகளத்தின் சூழ்நிலையைப் பொறுத்து அமைந்திருந்தது. ஆடுகளம் மெதுவாக இருந்ததால் இயல்பாக அதிரடியாக விளையாடுவதற்கு தடையாக இருந்தது. மேலும் இரண்டாவது டி20 போட்டிக்கும் நாம் இப்படியான ஒரு மெதுவான ஆடுகளத்தையே எதிர்பார்க்கலாம்.

எனவே இசான் கிஷான் போன்ற ஒரு பேட்ஸ்மேன் இப்படியான ஆடுகளத்தில் தாக்கம் தரக்கூடியவராக இருக்கலாம். திலக் வர்மா மிக நல்லபடியாக ஆட்டத்தை துவங்கி இருக்கிறார். அதை அவர் தொடரலாம். சூரியகுமார் யாதவும் பெரிய ஸ்கோருக்கு போகலாம்.

- Advertisement -

இந்த தோல்வியின் மூலமாக இந்திய அணி நிறைய பாடங்களை எடுத்துக் கொள்ள வேண்டுமா? என்று கேட்டால் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. ஏனென்றால் இந்தியா ஒரு இளம் அணியாக விளையாடுகிறது என்று நான் உணர்கிறேன். அவர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 கிரிக்கெட் விளையாடுகிறார்கள். நிறைய புதிய முகங்கள் வந்திருக்கிறார்கள். மேலும் ஒரு புதிய பேட்டிங் செட்டப் உருவாகி இருக்கிறது. இது இப்படியே செல்லட்டும்.

ரோகித் சர்மா விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் யாரும் இல்லை. இந்தப் புரம் வந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா, பும்ரா, சமி போன்று பெரியவர்கள் யாரும் கிடையாது. இந்தியா அந்த போட்டியை நல்ல விதத்தில் அணுகியதாகவே நான் பார்க்கிறேன். கடைசி நேரத்தில் தவறுகளால் தோல்வி அடைய வேண்டியதாக போய்விட்டது. இந்தியா வெற்றி பெறும் பக்கமாக சீக்கிரத்தில் மாறும்!” என்று நான் நம்புகிறேன் என்று உறுதியாகக் கூறியிருக்கிறார்!