“அடுத்து இந்தியாவுக்கு எதிராவும் இதே வேகத்தில்தான் போவோம்!” – வெற்றிக்குப் பின் நியூசிலாந்து கேப்டன் தன்னம்பிக்கையான பேச்சு!

0
876
Latham

இன்று நியூசிலாந்து அணி தனது நான்காவது ஆட்டத்தில், இங்கிலாந்தை வீழ்த்தி வந்த ஆப்கானிஸ்தான் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்த்து விளையாடியது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துக் கொண்டது. அது நியூசிலாந்து அணிக்கு நல்ல முடிவாக அமைந்துவிட்டது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு வில் யங், கேப்டன் லாதம் மற்றும் கிளன் பிலிப்ஸ் மூவரும் அரைசதம் அடித்தார்கள். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் சேர்த்தது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 139 ரன்களுக்கு சுருண்டு 149 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தன்னுடைய பலத்திற்கு முதலில் பேட்டிங் தேர்வு செய்து அடுத்து பந்து வீசி இருந்தால், ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்த தோல்வி அமைந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது போட்டியில் விளையாடிய நியூசிலாந்துக்கு இது நான்காவது வெற்றியாக அமைந்தது. மேலும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை நியூசிலாந்து பெற்றது. அடுத்து இந்திய அணிக்கு எதிராக தரம்சாலா மைதானத்தில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் “மகிழ்ச்சியான தொடக்கம். இன்று மற்றும் ஒரு சிறப்பான ஆட்டம். சில நேரங்களில் நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளானோம். ஆனால் இன்னிங்ஸ் முடிவில் அவர்கள் மீது அழுத்தத்தை திருப்பியது நன்றாக இருந்தது. மேலும் நாங்கள் ஒரு கட்டத்தில் திடீரென மூன்று விக்கெட்டுகளை இழந்தோம்.

அந்த இடத்தில் நாங்கள் ஒரு பார்ட்னர்ஷிப் உருவாக்க முயற்சி செய்தோம். அதை நன்றாகவும் ஆழமாகவும் எடுத்துச் சென்றோம். எங்களுக்கு அங்கும் இங்குமாக வாய்ப்புகள் வந்தன. அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தோம். பிலிப்ஸ் நல்ல இன்னிங்ஸ் ஒன்றை விளையாடினார். அவர் என் மீதும் அழுத்தம் கொடுத்தார். எங்களுடைய வீரர்கள் முதல் பத்து ஓவர்களில் சிறப்பான துவக்கத்தை அமைத்தார்கள்.

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு சில நல்ல நிகழ்ச்சிகளின் அடிப்படையில் நாங்கள் சரியான வழியில் அடி எடுத்து வைக்கிறோம் என்று நம்புகிறேன். எங்களுக்கு ஒரு வாரம் இல்லை அதற்கு மேல் நேரம் இருக்கிறது. பின்னர் நாங்கள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடுகிறோம். இதே வேகத்தை நாங்கள் தொடர்வோம் என்று நம்புகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!