இந்திய கிரிக்கெட்

2016 நடந்ததை நேபாள் எனக்கு ஞாபகப்படுத்திவிட்டது.. நேத்து எங்க ட்ரெஸ்ஸிங் ரூம் மோசமாகி இருக்கும் – சாம் கரன் பேட்டி

நேற்று நேபாள் அணிக்கு எதிரான போட்டி தனக்கு 2016 வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியை ஞாபகப்படுத்தி விட்டதாக சாம் கரன் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

அந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பெண் ஸ்டோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் தொடர்ந்து நான்கு சிக்ஸர்களை அடித்து கார்லோஸ் பிராத்வைட் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெல்ல வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம் கரன் புத்திசாலித்தனம்

நேற்று நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் சாம் கரன் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். குறிப்பாக ஆறு பந்துகளையும் யார்க்கர்களாக வீசி இங்கிலாந்து அணியை மோசமான தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

மேலும் இங்கிலாந்து கேப்டனிடம் தான் ஆறு பந்துகளையும் இப்படியே வீசப் போவதாகவும், இதனால் தோல்வி வந்தால் மொத்த பழியையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் கூறி சாம் கரன் இதைச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி வென்றபோதும் கூட அவர்கள் அனைவரும் நேபாள் அணியை பாராட்டி பேசி வருகிறார்கள்.

- Advertisement -

2016 ஞாபகம் வந்துவிட்டது

இதுகுறித்து சாம் கரன் பேசும் பொழுது “நாங்கள் நேற்று இந்த போட்டியில் வென்று இரண்டு புள்ளிகள் பெற்று விட்டோம். இல்லையென்றால் எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூம் சந்தோஷமாக இருந்திருக்காது. நான் நிறைய டி20 கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். இப்படி நெருங்கி வந்து வெல்லும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கும்”

இதையும் படிங்க : என் கோச் வாழ்க்கையை சூர்யாதான் ஈசி ஆக்கினார்.. நான் கனவு கண்ட ஒரு வீரர் அவர் – கம்பீர் நெகிழ்ச்சி

“மேலும் தற்போது அசோசியேட் நாடுகள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகின்றன. அவர்களை நாம் குறைவாக எடுத்துக் கொள்ள முடியாது. நேற்று நேபாள் அணி விளையாடிய விதத்தில் எனக்கு 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரும் கார்லோஸ் அடித்த சிக்ஸர்களும் ஞாபகம் வந்துவிட்டது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Sam Curran