என் கோச் வாழ்க்கையை சூர்யாதான் ஈசி ஆக்கினார்.. நான் கனவு கண்ட ஒரு வீரர் அவர் – கம்பீர் நெகிழ்ச்சி

0
4
Gambhir

இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இந்த வடிவத்தில் தன்னுடைய பயிற்சியாளர் வேலையை மிகவும் எளிமையாக்கி விட்டார் என கம்பீர பாராட்டி பேசி இருக்கிறார்.

இந்திய அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் அமெரிக்க அணியிடம் மிகவும் தடுமாறி வெற்றி பெற்றது. கேப்டன் சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் 84 ரன்கள் பொறுப்பாக கடைசி வரை விளையாடி எடுத்ததால் இந்திய அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

என் வேலையை எளிதாக்கிவிட்டார்

இந்த நிலையில் சூரியகுமார் குறித்து கம்பீர் பேசும் பொழுது “இந்த டி20 கிரிக்கெட் வடிவத்தில் என்னுடைய பயிற்சியாளர் பொறுப்பை சூரியகுமார் யாதவ் மிகவும் எளிமையாக்கி விட்டார். நான் நினைப்பது அவர் ஒரு சிறந்த தலைவர். அவர் மைதானத்தில் என்ன செய்கிறார்? அவர் எப்படிப்பட்ட பேட்ஸ்மேன்? என்ன மாதிரி ஷாட் ஆடுகிறார்? என்பதை வைத்து நான் இதை சொல்லவில்லை”

“அவர் மற்ற வீரர்களுடன் எப்படி பழகுகிறார்? அவர்களுடன் என்ன பேசி எவ்வளவு நேரம் செலவிடுகிறார்? மைதானத்தில் எவ்வளவு அமைதியாக இருக்கிறார்? இந்த மாதிரியான விஷயங்கள்தான் அவரை உண்மையான தலைவராக காட்டுகிறது. ஒரு பயிற்சியாளராக அவர் அணியின் சூழ்நிலையை மிகவும் அமைதியாக வைத்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு பயிற்சியாளர் கனவு காணக்கூடிய கேப்டன் இவர்தான்”

- Advertisement -

சூர்யா ஒரு தலைவர்

“என்னை பொருத்தவரையில் சூர்யா ஒரு சிறந்த வீரர் என்பதை தாண்டி அவர் ஒரு சிறந்த தலைவராக இருக்கிறார். ஒரு சிறந்த தலைவருக்கான எல்லா அளவுகோலையும் அவர் பூர்த்தி செய்து இருக்கிறார். இதனால்தான் என்னுடைய வேலை எளிதாகி விட்டது”

இதையும் படிங்க : இந்திய அணியில் இருப்பவர்களும் மனிதர்கள் தானே.. பாகிஸ்தான் முடிவு முட்டாள்தனமானது – கங்குலி விமர்சனம்

“அவரைப் போன்ற ஒருவர் அணியை வழிநடத்துவது பெரிய விஷயம். ஏனென்றால் அவருடைய மனது அருமையானது. அவரிடம் நல்ல நோக்கங்கள் மட்டுமே இருக்கிறது. குறிப்பாக அழுத்தமான நேரங்களில் அவர் சரியான முடிவுகளை எடுத்துக் கொள்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -