அவுட்டாகிவிட்டு போறவரை வம்பிழுத்து தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்ட சுட்டி குழந்தை! – தக்க தண்டனை கொடுத்தது ஐசிசி!

0
624

டெம்பா பாவுமாவின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு, ஆக்ரோஷமாக கொண்டாடி அவரை வம்பிழுத்ததால் ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ஒழுக்கக்குறைபாட்டில் ஒரு புள்ளி குறைக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது. இரண்டு போட்டிகளையும் தென் ஆப்பிரிக்க அணி வென்றுள்ளது. இதனால் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.

- Advertisement -

இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரு அணிகளின் பேட்டிங்கில் சுவாரசியம் இருந்த அளவிற்கு, இரு அணி வீரர்களுக்கு மத்தியிலும் களத்தில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நிகழ்ந்து இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டெம்பா பவுமா, 102 பந்துகளில் 109 ரன்கள் அடித்து பேட்டிங்கில் முக்கிய பங்காற்றினார். அவரது விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்து இளம் வேகம் பந்துவீச்சாளர் சாம் கர்ரன், பவுமாவை நோக்கி ஓடி சென்று ஆக்ரோசமாக கொண்டாடியுள்ளார்.

ஐசிசி விதிமுறைப்படி, ஒரு வீரரின் விக்கெட்டை ஆக்ரோஷத்துடன் அதிகபட்சமாக உணர்வுகளை வெளிப்படுத்தி கொண்டாடுவது விதிமீறல் ஆகும். மேலும் இது எதிரணி பேட்ஸ்மேனை வன்முறைக்கு தூண்டுவதற்குரிய செயலாகவும் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆகையால் ஷாம் கர்ரண் மீது போட்டியிலிருந்து 15 சதவீதம் சம்பளத்தொகையை அபராதமாக விதித்திருக்கிறது ஐசிசி. மேலும் இவருக்கு ஒழுக்கக்குறைபாடு புள்ளியிலிருந்து ஒரு புள்ளி குறைக்கப்பட்டு இருக்கிறது.

ஐசிசி விதிமுறைப்படி, 24 மாதங்களுக்குள் நான்கு முறை ஒரு வீரருக்கு புள்ளிகள் குறைக்கப்பட்டால் அவர் குறிப்பிட்ட காலம் சர்வதேச போட்டிகளில் இருந்து தடை செய்யப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து-தென்னாபிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்த ஒரு சம்பவத்துடன் முடிவடையவில்லை. தென்னாப்பிரிக்க வீரர் வேன்டர் டசன் மற்றும் ஜோஸ் பட்லர் இடையேவும் வாக்குவாதம் நேர்ந்திருக்கிறது.

வேன்டர் டசன் அடிக்க முயற்சித்தபோது, பந்து பேட்டில் படாமல் கீப்பர் வசம் சென்றது. அப்போது ஜோஸ் பட்லர் அவுட் என நடுவரிடம் முறையிட்டார். பந்து பேட்டில் படவில்லை என்பதால் சற்று கோபமடைந்த வேன்டர் டசன், பட்லரை பார்த்து முறைக்க, இருவரும் மத்தியில் வாக்குவாதம் அதிகரித்து வார்த்தைகள் தடித்தன.

உடனடியாக களத்தில் இருந்த நடுவர் உள்ளே சென்று இருவரையும் தடுத்து நிறுத்திய பிறகு ஆட்டம் சுமூகமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.