நேற்று இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியை டை செய்தது. இதைத்தொடர்ந்து அணியின் இளம் வீரர் சுப்மன் கில் பேட்டிங் செயல்பாடு மீது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. இந்திய பவுலிங் யூனிட் சுமாராக இருந்த போதிலும் கூட, பேட்டிங் யூனிட்டில் விராட் கோலி ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் இருந்த காரணத்தினால் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. துணை கேப்டன் சுக்மன் கில் 35 பந்துகள் விளையாடி 16 ரன்கள் மட்டுமே எடுத்து தவறான ஷாட் மூலம் ஆட்டம் இழந்தார். சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மற்றும் மெதுவான ஆடுகளத்தில் அவரால் சரியாக டைம் செய்து விளையாட முடியவில்லை.
மேலும் இடதுகை சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிரான அவரது தடுமாற்றம் தொடர்ந்து இருந்து வருவது கவலை அளிக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கு முன்பு வரையில் அவருடைய ஒருநாள் கிரிக்கெட் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அவருடைய பேட்டிங் சீரானதாக இல்லை என்பதை உண்மை. மேலும் வெளியில் தயாராக ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற திறமையான வீரர்களும் இருக்கிறார்கள்.
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறும் பொழுது “கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும் சீரானவராகவும் இருந்தார். ஆனால் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு அவருடைய பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் துவக்கத்தை தந்துவிட்டு ஆட்டம் இழந்து விடுகிறார்”
“அவர் தொடர்ந்து இருபது முதல் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்கிறார். மேலும் பந்தைக் காற்றில் அடித்து உள் வட்டத்தில் பிடிபடுகிறார். அப்பிஷ் டிரைவ் மற்றும் பாயிண்ட் திசையில் கேட்ச் ஆனார். அவர் ஆட்டம் இழக்கும் காலம் 20 முதல் 25 ரன்களில் இருக்கிறது. எனவே அவர் வெகு சீக்கிரத்தில் கவனம் இழந்து விடக் கூடியவராக இருக்கிறார் என்று தெரிகிறது”
இதையும் படிங்க : ரோகித் விக்கெட்டுக்கு இப்படித்தான் பிளான் பண்ணினேன்.. ஆனா பேட்டிங் திட்டம் வேற மாதிரி – வெல்லாலகே பேட்டி
“கில் இப்படியான காலகட்டத்தில் நிறைய முறை அவுட் ஆகி இருக்கிறார். இந்த வகையில் அவர் ஆட்டம் இழப்பதுஒரு பெரிய வீரருக்கு நல்ல அறிகுறி கிடையாது. அதே சமயத்தில் அவர் இதை சரி செய்து கொண்டு முன்னேறாவிட்டால், அவருடைய இடத்திற்கு ஜெய்ஸ்வால் வந்துவிடுவார்” என்று கூறி இருக்கிறார்.






