ஆசியக் கோப்பை அணி கேப்டன்களின் சம்பள விவரம்!

0
708
Asiacup2022

ஆசிய கோப்பை போட்டி கடத்த இரண்டு நாட்களுக்கு முன்பு துபாய் சர்வதேச மைதானத்தில் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே துவங்கியது. இந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. அதற்கு அடுத்து நேற்று நடந்த பாகிஸ்தான் இந்தியா மோதிய பரபரப்பான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் ஹாங்காங் ஆறு அணிகளை கொண்டு ஆசிய கோப்பை தொடர் தற்போது 20 ஓவர் வடிவத்தில் நடத்தப்படுகிறது. இந்த ஆறு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களில் இந்தியா தான் மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்பது தெரிந்த விஷயம் தான். இந்திய அணியின் கேப்டன் ஓடு மற்ற ஐந்து அணிகளின் கேப்டன்கள் என்ன சம்பளத்தை வருடம்தோறும் பெறுகிறார்கள் என்று இந்த வீடியோ தொகுப்பில் பார்ப்போம்.

- Advertisement -

ரோகித் சர்மா இந்தியா:

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. இவர் பிசிசிஐயின் சம்பள ஒப்பந்தத்தில் எ+ பிரிவில் இருக்கிறார். இதற்காக இவருக்கு ஆண்டுதோறும் 7 கோடி ரூபாய் சம்பளம் தரப்படுகிறது!

பாபர் ஆஸம் பாகிஸ்தான் :

- Advertisement -

இவரின் பேட்டிங் எழுச்சிக்குப் பிறகு சரிந்து கிடந்த பாகிஸ்தானின் கிரிக்கெட் மீண்டும் புத்துயிர் பெற்று இருக்கிறது என்றே கூறலாம். கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாபரின் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து இருந்தது. இவருக்கு வருடம்தோறும் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 2.4 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது. இந்திய ஒரு ரூபாயின் மதிப்பு பாகிஸ்தானின் 2.80 ரூபாய்க்கு சமமாகும். இந்த அடிப்படையில் பார்த்தால் பாபர் வருடம் தோறும் ஒரு கோடி இந்திய ரூபாய் மதிப்பில் சம்பளம் பெறுகிறார்.

ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ்:

தற்போது மீண்டும் பங்களாதேஷ் அணிக்கு ஆசிய கோப்பை மற்றும் அடுத்து வருகின்ற டி20 உலக கோப்பைக்கு கேப்டனாக இவரை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் நியமித்திருக்கிறது. இவருக்கு ஆண்டுதோறும் 57,000 அமெரிக்க டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு போட்டிக்கும் தனி சம்பளமும் வழங்கப்படுகிறது. ஒரு டாலர் என்பது இந்திய பணத்தில் 80 ரூபாய்க்கு சமம். இதன்படி பார்த்தால் இவர் வருடம் தோறும் இந்திய ரூபாய் மதிப்பில் 45 லட்சம் சம்பளம் பெறுகிறார்.

டசன் சனகா இலங்கை :

தற்போது மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்தித்து இருக்கும் இலங்கை நாட்டின் கிரிக்கெட் அணியின் கேப்டனான இவருக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் எடுத்துக்கொண்டால் வருடத்திற்கு 80 லட்சம் ரூபாய்!

முகமது நபி ஆப்கானிஸ்தான்:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் தருகிறது என்ற துல்லிய விபரம் தெரியவில்லை. ஆனாலும் ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபிக்கு ஆண்டுதோறும் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடி கிடைப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன!

நிஷாகாட் கான் ஹாங்காங்:

ஹாங்காங் கிரிக்கெட் நிர்வாகம் முதன்முதலில் 2014ஆம் ஆண்டு சம்பள ஒப்பந்தம் முறையைக் கொண்டு வந்தது. இதில் ஆங்காங்கே அணியின் கேப்டனான இவருக்கு அதிகப்படியாக மாதம்தோறும் 11,500 டாலர்கள் சம்பளமாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. தற்போது எந்த அளவிற்கு இந்த ஊதியம் உயர்த்தப்பட்டு இருக்கிறது என்பது தெரியவில்லை. இவரது சம்பளம் மதிப்பு இந்திய ரூபாயில் மாதம்தோறும் ஒன்பது லட்சம்!