பலதடவை சொல்லிட்டேன் இப்பவும் சொல்றேன் ; சென்னை அணி இதைச் செய்தே ஆக வேண்டும் – ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தல்

0
952
Ravindra Jadeja and Aakash Chopra

விடுமுறை நாளின் முக்கிய நாளான ஞாயிறில் நேற்று, டபுள் ஹெட்டரின் இரண்டாவது போட்டியாக, மகாராஷ்ட்ராவின் புனே மைதானத்தில், குஜராத் அணியும், சென்னை அணியும் பலப்பரீட்சை நடத்திய போட்டி, பரபரப்பான போட்டியாக அமைந்திருக்கிறது.

முதலில் டாஸ் வென்ற ரஷீத்கான் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைக்க, உத்தப்பாவும், மொயீனும் ஏமாற்ற, ருதுராஜூம், அம்பதியும் சிறப்பாக விளையாடி அணியை முன்னேற்றினார்கள். ஆனால் இறுதி நேரத்தில் சிவம்துபே சொதப்ப, 180 வரவேண்டிய ஸ்கோர் 169 என்றானது.

- Advertisement -

அடுத்து களமிறங்கிய குஜராத்தின் மொத்த ஆறு பேட்ஸ்மேன்களில் ஐந்து பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி பேட்ஸ்மேனான மில்லர், ரஷீத்கானை வைத்துக்கொண்டு, சென்னை அணியின் வெற்றிக் கனவை சிதைத்து விட்டார்.

குறிப்பாக இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்டானின் 18-வது ஓவரில் பவுண்டரி சிக்ஸரென ரஷீத்கான் வெளுத்துத்தள்ள சென்னை அணியின் பக்கமிருந்த ஆட்டம் அப்படியே குஜராத் அணியின் பக்கம் சென்றுவிட்டது. மேலும் 20வது ஓவரை அவரே வீச ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரியென அடித்து ஆட்டத்தை முடித்துவிட்டார் மில்லர்.

இதுக்குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும்பொழுது “நான் பலதடவை கூறிவிட்டேன். நான் இப்போதும் கூறுகிறேன். ஜோர்டானுக்கு பதிலாக ப்ரட்டோரியஸை கொண்டு வரவேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். சென்னையின் அணித்தேர்வு ஆரம்பத்திலிருந்தே படுசொதப்பலாகவே இந்தத் தொடர் முழுவதும் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -