ஜோடி சேர்ந்து 38.3 ஓவரில் 400+ ரன்கள்; ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் யாருமே நெருங்க முடியாத ரெக்கார்டை வைத்த தமிழக ஜோடி ஜெகதீசன்-சாய் சுதர்சன்!

0
931

ஜோடி சேர்ந்து ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் புதிய வரலாறு படைத்திருக்கிறது தமிழக அணியின் துவக்க வீரர்கள் ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன்.

விஜய் ஹசாரே தொடரில் நடைபெற்று வரும் லீக் சுற்றில், சி பிரிவில் தமிழக அணி இடம் பெற்று இருக்கிறது. 5 போட்டிகளில் முடிவில் நான்கு வெற்றிகள் மற்றும் ஒரு போட்டி மழை காரணமாக ரத்து ஆனதையடுத்து, 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது

- Advertisement -

தமிழக அணி தனது ஆறாவது போட்டியை அருணாச்சலப்பிரதேசம் அணிக்கு எதிராக இன்று விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணிக்கு சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஜெகதீசன் 79 பந்துகளில் சதம் அடித்தார். விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக இவர் அடிக்கும் ஐந்தாவது சதம் இதுவாகும். இதன் மூலம் பல புதிய உலக சாதனைகளை படைத்திருக்கிறார்.

இரட்டை சதமடித்த ஜெகதீசன், 141 பந்துகளில் 277 ரன்கள் அடித்து அவுட்டானார். இதில் 15 சிக்ஸர்கள் 25 பவுண்டரிகள் அடங்கும்.

- Advertisement -

மற்றொரு துவக்க வீரர் சாய் சுதர்சன் 69 பந்துகளில் சதம் அடித்தார். இவர் 102 பந்துகளில் 154 ரன்கள் அடித்தார் இதில் 19 பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும்.

சாய் சுதர்சன் – ஜெகதீசன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் சேர்த்தது. லிஸ்ட்-ஏ போட்டிகளில் ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் 400 ரன்களுக்கும் மேல் அடித்த முதல் ஜோடி இதுவாகும்.

இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு கிரிஸ் கைகெயில் மற்றும் மார்லன் சாமுவேல்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து 372 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது. தற்போது தமிழக ஜோடி இந்த சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்திருக்கிறது.

அருணாச்சல பிரதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் தமிழக அணி 506/2 அடித்தது. லிஸ்ட்-ஏ போட்டிகளில் 500 ரன்கள் கடந்த முதல் அணி என்ற புதிய வரலாறு படைத்திருக்கிறது. இதற்கு முன்னர் அதிகபட்சமாக, இங்கிலாந்து அணி 498 ரன்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.