ஜிம்பாப்வே தொடர்.. சாய் சுதர்சனுக்கு நடந்த சோகம்..இந்த முடிவு நியாயமா?.. ரசிகர்கள் கோபம்

0
439
Sudharsan

இந்திய அணி தற்பொழுது சுப்மன் கில் தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த நிலையில் ஒரு வாய்ப்பை மட்டுமே பெற்ற சாய் சுதர்சன் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோபமடைய வைத்திருக்கிறது.

இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 115 ரன்களை துரத்தி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டி20 வடிவத்தில் உலக சாம்பியனாக இருக்கும் இந்திய அணி, டி20 உலக கோப்பைக்கு தகுதி பெறாத அணியிடம் தோல்வி அடைந்தது பெரிய விமர்சனங்களை உருவாக்கியது.

- Advertisement -

இதன் காரணமாக சுதாரித்த இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இரண்டாவது டி20 போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதுவை நீக்கிவிட்டு, அவருடைய இடத்தில் கூடுதல் பேட்ஸ்மேன் சாய் சுதர்சனுக்கு நேற்று வாய்ப்பு கொடுத்தது. நேற்று ஒரு பந்தை கூட விளையாடுவதற்கு அவருக்குசந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இப்படியான நிலையில் கடைசி மூன்று போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பில் சாய் சுதர்சன் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவருடன் சேர்ந்து ஹர்ஷித் ரானா மற்றும் இதே சர்மா இருவரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடைய இடத்தில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே ஆகியோர் இடம் பெறுகிறார்கள்.

- Advertisement -

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 15 பேர் கொண்ட அணியில் இந்த மூவரும்தான் இடம் பெற்று இருந்தார்கள். ஆனால் டி20 உலக கோப்பையை வென்று இந்தியா வருவதற்கு தாமதமான காரணத்தினால் முதல் இரண்டு போட்டிகளில் இவர்கள் விளையாடவில்லை. தற்பொழுது இவர்கள் இந்திய அணியுடன் இணைந்து விட்டதால், சாய் சுதர்சன் ஹர்ஷித் ரானா மற்றும் ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க : எழுதி வச்சுக்கோங்க.. என் மகன் இந்த பையன் கூட சேர்ந்து.. இந்தியாவுக்கு பெருசா பண்ணுவான் – அபிஷேக் ஷர்மா தந்தை பேட்டி

இதற்குள் இருக்கும் உண்மை நிலைமை இப்படியாக இருந்தாலும் கூட, சிவம் துபே இடத்தில் தாராளமாக சாய் சுதர்சன் அணியில் தொடரலாம் இன்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சாய் சுதர்ஷன் நீக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -