எழுதி வச்சுக்கோங்க.. என் மகன் இந்த பையன் கூட சேர்ந்து.. இந்தியாவுக்கு பெருசா பண்ணுவான் – அபிஷேக் ஷர்மா தந்தை பேட்டி

0
1295
Abhishek

நேற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை 100 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றது. இந்த போட்டியில் 46 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து அனைவரது கவனத்தையும் அபிஷேக் சர்மா திருப்பி இருக்கிறார். தனது மகன் பேட்டிங் பாணி குறித்து அவரது தந்தை ராஜ்குமார் சர்மா பேசியிருக்கிறார்.

இந்தத் தொடரில் முதல் போட்டியில் சிக்ஸர் அடிப்பதற்கு சென்று ரன் ஏதும் எடுக்காமல் தன்னுடைய அறிமுக போட்டியிலேயே அபிஷேக் சர்மா ஆட்டம் இழந்தார். ஆனால் இரண்டாவது போட்டியில் வந்து தன்னுடைய முதல் ரன்னையே சிக்ஸர் மூலமாகவே தைரியமாக எடுத்தார். மேலும் 50 ரன்கள் மற்றும் நூறு ரண்களை கடக்கும் பொழுது சிக்ஸர்கள் அடித்துதான் கடந்தார்.

- Advertisement -

அபிஷேக் சர்மாவின் ஆக்ரோஷ பேட்டிங் அணுகுமுறை இந்திய டி20 கிரிக்கெட்டுக்கு மிகவும் தேவையான ஒன்றாக மாறியிருக்கிறது. இதன் காரணமாக அவர் இந்திய டி20 கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாட கூடியவராக இருப்பார் என்றும் இப்பொழுதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில் அவருடைய பயிற்சியாளர் மற்றும் தந்தையான ராஜ்குமார் சர்மா அபிஷேக் சர்மா பேட்டிங் பற்றி பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது ” டி20 கிரிக்கெட்டின் தற்போதைய தேவை என்னவென்றால் முதல் பந்தில் இருந்து தாக்க ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். இதற்கு ரோகித் சர்மா அனைத்து இந்திய இளைஞர்களுக்கும் வழிகாட்டி இருக்கிறார். எப்படி விளையாட வேண்டும்? என்கின்ற டெம்ப்ளேட் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அபிஷேக் ரோஹித் சர்மாவின் பேட்டிங் பாணியை பின்பற்ற முயற்சிக்கிறார் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

- Advertisement -

முதல் போட்டியில் அவர் லென்த்தை கொஞ்சம் தவறாக கணித்து சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டம் இழந்து விட்டார். ஆனால் இரண்டாவது போட்டியில் சிக்ஸர் அடித்து ரன் கணக்கை துவங்கினார். மேலும் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து சதத்தை நிறைவும் செய்தார். அவர் ஆட்டம் இழந்ததற்காக சிக்ஸர் அடிக்கும் தன்னுடைய திறமை குறித்து வருத்தப்பட்டார். ஆனால் அவரால் முடியும் என்று அவருடைய பலத்தை நினைவு படுத்தினேன். இதை எதையும் மாற்ற வேண்டாம் உங்கள் பலத்தில் விளையாடுங்கள் என்று சொன்னேன்.

இதையும் படிங்க : வெறும் 15 ஓவர்.. நமீபியா அணியை ஓடிஐ கிரிக்கெட்டில் வீழ்த்திய பஞ்சாப்.. அதிரடி காட்டிய ஐபிஎல் நட்சத்திர வீரர்கள்

சுப்மன் கில் கேப்டனாக இருப்பது அவருக்கு மேலும் உதவியாக இருந்தது. இருவருமே 14 வயதுக்குட்பட்ட பஞ்சாப் அணியில் இருந்து விளையாடி வந்திருக்கிறார்கள். இப்போது இவர்கள் இந்திய அணிக்காகவும் விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். என்னுடைய வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், இவர்கள் இருவரும் இந்தியாவுக்காக பல சிறப்பான பார்ட்னர்ஷிப்புகளை எதிர்காலத்தில் அமைத்து வெற்றியை கொண்டு வரப் போகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -