ஒரு போட்டியில் 300 ரன் எடுக்க.. நான் மேத்யூ ஹைடன் கிட்ட ஒரு முக்கிய விஷயம் பேசி இருக்கேன் – சாய் சுதர்சன் பேட்டி

0
4
Sai

நாளை துவங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் 300 ரன்கள் எடுப்பது குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணி துவக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் பேசியிருக்கிறார்.

தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியில் பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் பொறுப்பேற்று உள்ளார். இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் நிலையான துவக்கம் தந்தாலும் பெரிய அதிரடியான துவக்கம் தருவது கொஞ்சம் குறைவாக உள்ளது.

- Advertisement -

முக்கிய பிரச்சனை

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் இரண்டு சீசன்களில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்த பொழுது ஒருமுறை சாம்பியனாகவும் ஒருமுறை ரன்னராகவும் வந்து அந்த அணி அசத்தியது. இந்த நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு அவர்களால் முன்னேற முடியவில்லை.

தற்போது இந்த அணிக்கு வாங்கப்பட்டிருக்கும் வாஷிங்டன் சுந்தருக்கு என்ன மாதிரியான ரோல் கொடுப்பது என்று தெரியாமல் இருந்து வருகிறார்கள். கடந்த முறை வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் மிகச் சிறப்பான முறையில் விளையாடியிருந்தார். எனவே இவரை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம்.

- Advertisement -

300 ரன் இலக்கு

இதுகுறித்து சாய் சுதர்சன் பேசும்பொழுது “இது முழுவதுமே கண்டிஷனை புரிந்து கொண்டு நாம் விளையாடுவதை பற்றியது மட்டுமே. முன்கூட்டியே ஒரு போட்டியில் 300 ரன்கள் எடுக்க வேண்டும் என்று களம் இறங்க முடியாது. எதிர் அணியில் உள்ள வீரர்களையும் கண்டிஷனையும் பார்த்து விளையாட வேண்டும். நாங்கள் 300 ரன்கள் எடுக்க வேண்டும் என முன் திட்டத்துடன் களம் இறங்க மாட்டோம்”

இதையும் படிங்க: கேஎல் ராகுல் கூட அந்த இலங்கை பையன விடுங்க.. ஐபிஎல் கப் ஆரஞ்சு கேப் எல்லாம் கிடைக்கும் – அஸ்வின் அறிவுரை

“பவர் ஹிட்டிங் தொடர்பாக எங்கள் பேட்டிங் பயிற்சியாளர் மேத்யூ ஹைடன் சில பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு நடுவில் 10 நாட்கள் நேரம் இருந்த காரணத்தினால் இது குறித்து நாங்கள் பேசியிருக்கிறோம். அவர் இந்த மாதிரியான அம்சங்களை அவர் விளையாடும் காலத்தில் எப்படி பார்த்தார்? என்றும் கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறோம். இது எனக்கு மேலும் வெற்றி பெறுவதற்கு உதவும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -