கேஎல் ராகுல் கூட அந்த இலங்கை பையன விடுங்க.. ஐபிஎல் கப் ஆரஞ்சு கேப் எல்லாம் கிடைக்கும் – அஸ்வின் அறிவுரை

0
4
Ashwin

நாளை துவங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் துவக்க ஆட்டக்காரராக கேஎல்.ராகுலை கொண்டு வர வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணிக்கு வாங்கப்பட்ட கேஎல்.ராகுல் மிடில் வரிசையில் ஆரம்பத்தில் விளையாடினார். பிறகு துவக்க இடத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். ஆனால் மீண்டும் அவருடைய இடம் மாற்றப்பட்டது.

- Advertisement -

டெல்லி கேப்பிட்டல்ஸ் பிரச்சனை

டெல்லி கேப்பிட்டல் அணி மெகா ஏலத்தில் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அந்த அணி முதல் பாதி ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் மேலே இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியில் தடுமாறிய அந்த அணியால் ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியவில்லை.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழு இரண்டாம் பாதியில் பல மாற்றங்களை அணியில் செய்தது. இவர்களுடைய அதிகபட்ச தலையீடுகள் அந்த அணியின் வேகத்தை நிறுத்திவிட்டது. எனவே இந்த முறை அது போல செய்யக்கூடாது என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இவரைக் கொண்டு வாருங்கள்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “சிஎஸ்கே அணிக்கு எதிரான ஒரு போட்டியில் இருவேகம் இருந்த ஆடுகளத்தில் துவக்க வீரராக கேஎல்.ராகுல் அபாரமாக விளையாடியிருந்தார். ஆனால் அதன் பிறகு சிறிது காலத்திற்கு அவரை துவக்க வீரராக கொண்டு வரவில்லை. எனவே இந்த முறை அவரை துவக்க வீரராக கொண்டு வாருங்கள். அவருடன் இலங்கை வீரர் பதும் நிசாங்காவை அனுப்புங்கள். அவர்களை அந்த இடத்தில் அப்படியே விட்டு விடுங்கள்”

இதையும் படிங்க : பாகிஸ்தான் பிஎஸ்எல் பரிதாபங்கள்.. திடீரென பிங்க் நிறத்தில் மாறிய பந்து.. காசே இல்லையா உங்ககிட்ட ரசிகர்கள் விமர்சனம்

“அணி நிர்வாகத்தில் உள்ள பயிற்சியாளர்கள் குழு அதிகமாக மாற்றங்களை செய்து தலையீடு செய்தால் அது அணியை எதிர்பாராத விதமாக பாதிக்கலாம். அசுதோஸ் சர்மா ஒரு அபாரமான இன்னிங்ஸ் விளையாடினார். ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது போல தோன்றியது. பின்னர் திடீரென சமீர் ரிஸ்வி ஒரு போட்டியில் விளையாடினார். இப்படிப்பட்ட மாற்றங்கள் அணியின் நிலைத்தன்மையையும் வீரர்களின் நம்பிக்கையையும் தொலைத்து விடும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -