ஹர்திக் பாண்டியாவை நான் இதுக்குதான் முறைத்தேன்.. இதுல தப்பே கிடையாது – சாய் கிஷோர் விளக்கம்

0
355

நேற்று நடைபெற்று முடிந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் ஒன்பதாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த சூழ்நிலையில் போட்டியின் போது ஹர்திக் பாண்டியா உடன் குஜராத் வீரர் சாய் கிஷோர் உரசி கொண்ட சம்பவம் குறித்து சாய் கிஷோர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்து குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. குஜராத் அணியை பொருத்தவரை சாய் சுதர்சன் 41 பந்துகளை எதிர் கொண்டு 63 ரன்கள் குவித்தார். விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் 39 ரன்கள் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் கில் 38 ரன்கள் குவித்தனர்.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க வீரர்கள் விரைவாக ஆட்டம் இழக்க சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஓரளவு பொறுப்பாக விளையாடினாலும் திலக் வர்மா வெளியேறிய பிறகு ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய உள்ளே வந்தார். இந்த சூழ்நிலையில் அவருக்கு சாய் கிஷோர் ஓவர் வீசிக்கொண்டிருந்த போது இவர்கள் இருவரும் முறைத்துக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து சாய்கிஷோர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” ஹர்திக் பாண்டியாவும் நானும் முறைத்துக் கொண்டது குறித்து கேட்கிறீர்கள். அப்படியெல்லாம் கிடையாது. அவர் என் நல்ல நண்பர், ஆனால் மைதானத்திற்குள் அப்படித்தான் இருக்க வேண்டும். மைதானத்திற்குள் யார் வேண்டுமானாலும் எதிராளி தான். ஆனால் இதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. நாங்கள் நல்ல போட்டியாளர்கள், ஆட்டம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்று குஜராத் அணிக்காக தற்காப்புடன் பந்து வீச வேண்டி இருந்தது.

இதையும் படிங்க:CSK vs RR.. சிஎஸ்கே உத்தேச பிளேயிங் XI.. அதிரடி மாற்றங்கள்.. இத செஞ்சா வெற்றி உறுதி.. முழு அலசல்

இன்றைய போட்டியில் சூரியகுமார் யாதவ் நன்றாக விளையாடினார். எனது நல்ல நீல பந்துகளை ஸ்வீப் செய்து அசத்தலாக விளையாடினார். யாராவது ஒருவர் நன்றாக விளையாடினால் அவர் மீது பாராட்டுக்கள் நிச்சயம் தெரிவிக்க வேண்டும். நான் உள்ளுணர்வாக உணர்ந்த விஷயங்களை செய்தேன் இதில் கேப்டன் கில்லை பாராட்ட வேண்டும். இந்திய வலைகளில் சூர்யா பேட்டிங் செய்த விதத்தை பார்த்து அவருக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினார். இந்த சீசனுக்காக நிறைய உழைத்திருக்கிறேன் எனவே இது ஒரு அற்புதமான சீசனாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -