நடப்பு ஐபிஎல் தொடரில் நாளை மீண்டும் சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கௌகாத்தி மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கு சிஎஸ்கே பிளேயிங் லெவன் எப்படி அமைந்தால் சரியாக இருக்கும்? என்று பார்க்கலாம்.
சிஎஸ்கே அணி தனது இரண்டாவது போட்டியில் நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது பெரிய விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது. எனவே குறைந்தபட்சம் மூன்று மாற்றங்கள் சிஎஸ்கே அணியில் செய்ய வேண்டியதாக இருக்கிறது.
எந்த அணியிலும் இல்லாதது
தற்போது எந்த அணியிலும் மூன்று முழுமையான ஸ்பின்னர்களை வைத்து விளையாடுவது கிடையாது. அதிகபட்சம் இரண்டு முழுமையான ஸ்பின்னர்கள் இருப்பார்கள் ஒரு பார்ட் டைம் ஸ்பின்னர் இருப்பார். ஆனால் சிஎஸ்கே அணியில் ஜடேஜா, அஸ்வின் மற்றும் நூர் அகமத் என மற்றும் மூன்று முழு நேர ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். இது சிஎஸ்கே அணிக்கு ஒரு சுமையாக தற்பொழுது மாறி இருக்கிறது.
மேலும் சிஎஸ்கே அணியின் தற்போது கலில் அகமது உடன் இணைந்து பவர் பிளேவில் பந்து வீச இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் யாரும் இல்லை. சாம் கரன் இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் அளவுக்கு திறமையானவர் இல்லை. எனவே கூடுதல் வேகப்பந்துவீச்சு தேவைப்படுகிறது. மேலும் பேட்டிங் யூனிட்டில் ராகுல் திரிபாதி நீக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்.
செய்ய வேண்டிய மூன்று மாற்றங்கள்
இந்த போட்டி நடைபெறும் கௌகாத்தி மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு கொஞ்சம் ஒத்துழைப்பதாக இருந்தாலும் கூட ஜடேஜா மற்றும் நூர் அகமத் என இரண்டு முழு நேர ஸ்பின்னர்களும், இவர்களுடன் பார்ட் டைம் ஸ்பின்னர் தீபக் ஹூடா போதுமானவர்.
இதைத்தொடர்ந்து பேட்டிங் யூனிட்டை வலுப்படுத்த சாம் கரனை வெளியேற்றி கான்வே தேவைப்படுகிறார். இதற்கடுத்து அஸ்வின் மற்றும் ராகுல் திரிபாதியை இருவரையும் நீக்கிவிட்டு வேகப்பந்துவீச்சாளர் அன்சூல் காம்போஜ் மற்றும் விஜய் சங்கர் இருவரும் சேர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் சரியான பவுலிங் மற்றும் பேட்டிங் யூனிட் அமையும்.
இதையும் படிங்க : அடிப்படை விஷயத்தையே சரியா செய்யல.. எங்க தோல்விக்கு அவங்க 2 பேர்தான் முக்கிய காரணம் – மும்பை கேப்டன் பேட்டி
சிஎஸ்கே பிளேயிங் லெவன்: டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்தரா, ருதுராஜ், சிவம் துபே, தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், தோனி, அன்சூல் காம்போஜ், நூர் அகமத், கலீல் அகமத். மேலும் இம்பேக்ட் பிளேயராக மதிஷா பதிரனா.






