யுவராஜ் சிங் அணியை சச்சின் அணி வீழ்த்தியது.. அதே பழைய ஆட்டம்.. ரசிகர்கள் பரவசம்

0
560
Sachin

இன்று சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான ஒன் வேர்ல்ட் அணியும், யுவராஜ் சிங் தலைமையிலான ஒன் ஃபேமிலி அணியும் மோதிக்கொண்ட டி20 போட்டி நடைபெற்றது.

சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான அணியில் நமன் ஓஜா, உபுல் தரங்கா, அல்விரோ பீட்டர்சன், சுப்பிரமணியம் பத்ரிநாத், அசோக் டின்டா, அஜந்தா மெண்டிஸ், ஹர்பஜன் சிங் மாண்டி பனேசர், ஆர்பி சிங் மற்றும் டானி மொரிசன் ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள்.

- Advertisement -

யுவராஜ் சிங் தலைமையிலான அணியில் பார்த்தீவ் படேல், முகமது கைப், டேரன் மேடி, அலோக் கபாலி, ரமேஷ் கலுவிதரனா, யூசுப் பதான், ஜேசன் கிரேசா, முத்தையா முரளிதரன், மகாய நிதினி, சமிந்தா வாஸ் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யுவராஜ் சிங் தலைமையிலான ஒன் பேமிலி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு மேடி 41 பந்தில் 51, யூசுப் பதான் 24 பந்தில் 38, யுவராஜ் சிங் 10 பந்தில் 23, கலுவிதரனா 15 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்கள். பந்துவீச்சில் ஹர்பஜன் சிங் 2 மற்றும் சச்சின் 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சச்சின் தலைமை தாங்கும் ஒன் வேர்ல்ட் அணிக்கு அல்விரோ பீட்டர்சன் 50 பந்தில் 74, உபுல் தரங்கா 20 பந்தில் 29, சச்சின் டெண்டுல்கர் 16 பந்தில் 27, நமன் ஓஜா 18 பந்தில் 25 ரன்கள் எடுக்க, 19.5 ஓவரில் அந்த அணி வெற்றி பெற்றது. சமிந்தா வாஸ் பந்துவீச்சில் 3 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் 16 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 27 ரன்கள் எடுத்தார். மேலும் பந்துவீச்சில் இரண்டு ஓவர்கள் பந்து வீசி 23 ரன்கள் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

தற்பொழுது 50 வயதாகும் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை பார்க்கும் பொழுது முன்பு பார்த்ததற்கு எந்த பெரிய வித்தியாசமும் தெரியவில்லை. அவர் எப்பொழுதும் தயாராவது போல தயாராகி வந்து, வழக்கமாக அதே டச்சில் ஷாட்களை கனெக்ட் செய்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.