25 வருட சச்சின் சாதனை.. கோலியால் கூட தொட முடியவில்லை.. கில்லுக்கு உலக கோப்பையில் பிரகாச வாய்ப்பு.!

0
5571
Gill

ஒருநாள் கிரிக்கெட்டில் அரசன் என்றால் அது சச்சின் டெண்டுல்கர்தான். அந்த கிரிக்கெட் வடிவத்திற்கான தூதுவராகவே அவர் விளையாடும் காலங்களில் இருந்தார். அன்றைய காலக்கட்ட பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆடுகளங்கள், விதிகள் இவற்றில் ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவதற்கு கொஞ்சம் கடினமான ஒன்று.

அப்படியான கிரிக்கெட் வடிவத்தில் 49 சதங்கள், 18,426 ரன்கள் என இதுவரை யாரும் தொட்டுப் பிடிக்காத உயரத்தில் இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் தற்காலத்தில் விராட் கோலி மட்டுமே சச்சின் உடைய சில பல சாதனைகளை உடைத்து வரக்கூடியவராக இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் இப்படிப்பட்ட விராட் கோலியால் கூட, சச்சின் 25 வருடங்களுக்கு முன்பு படைத்த ஒரு சாதனையின் அருகில் கூட செல்ல முடியவில்லை. அப்படி ஒரு அபூர்வ சாதனையை சச்சின் தன் வசம் வைத்திருக்கிறார்.

பொதுவாக அவருடைய உச்சகட்ட பேட்டிங் ஃபார்ம் 1998 ஆம் ஆண்டு இருந்ததாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுவார்கள். அந்தக் காலகட்டத்தில் பந்துவீச்சாளர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தி விளையாட கூடியவராக சச்சின் இருந்தார். அந்த ஒரு ஆண்டில் மட்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் 1894 ரன்கள் குவித்திருக்கிறார். இதுவரை இந்தச் சாதனை குறித்து எந்த பேட்ஸ்மேனும் யோசித்தது கூட கிடையாது. ஏனென்றால் இது முடியாது.

ஆனால் தற்போது இந்தியாவின் இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் இந்த சாதனையை முறியடிக்க கூடிய வாய்ப்பில் இருக்கிறார் என்பதே பெரிய விஷயம். அவர் இந்த ஆண்டில் 72.35 சராசரியில், 105 ஸ்ட்ரைக் ரேட்டில் 1230 ரன்கள் குவித்திருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது சச்சினின் மகத்தான ஒருநாள் கிரிக்கெட் சாதனையை உடைக்க கில்லுக்கு இன்னும் 665 ரன்கள் தேவை. உலக கோப்பையில் அவருக்கு ஒன்பது ஆட்டங்கள் லீக் சுற்றில் கிடைக்கும். அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் கிடைத்தால் அதில் இரண்டு போட்டிகள் உண்டு. இந்த வருடத்தில் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் இருக்கிறது.

குறைந்தபட்சம் எடுத்துக்கொண்டு பார்த்தால் அவருக்கு இந்த வருடத்தில் 12 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதற்கு இருக்கிறது. அவர் இந்த அனைத்து போட்டிகளையும் விளையாடுவார் என்றால், அவர் ஒரு போட்டிக்கு 55 ரன்கள் வீதம் எடுக்க வேண்டும். தற்போது கில் உடைய ரன் சராசரி இந்த ஆண்டில் 72 இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் ஆயிரம் ரன்களைக் கடந்த ஒரே வீரராக கில் மட்டுமே இருக்கிறார். ஓய்வு காயம் எதுவும் இல்லாமல் 12 ஒருநாள் போட்டிகளையும் அவர் விளையாடினால், சச்சின் சாதனைகளை அவரால் முறியடிக்க முடியும். மேலும் ஒரு நாள் கிரிக்கெட் தற்காலத்தில் குறைந்து வருவதால், இனி கில் நினைத்தால் கூட இப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைக்காது. மேலும் இந்த வாய்ப்பு வேறு யாருக்குமே கிடைக்காது என்பது தான் உண்மை!