“பாகிஸ்தானுக்கு எதிராக செம்ம செட்டப் பண்ணிட்டிங்க.. எதிர்பார்க்கிறோம்!” – சச்சின் இந்திய அணிக்கு தட்டி விட்ட மெசேஜ்!

0
1866
Rohit

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மோதிய போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அவர்களை குறைந்த ஸ்கோர்க்கு சுருட்டியது. எல்லா பந்துவீச்சாளர்களும் விக்கெட் கைப்பற்றி இருந்தார்கள்.

அதே சமயத்தில் 200 ரண்களை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் விழுந்து நெருக்கடிக்கு உள்ளானது. அந்த போட்டியில் பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்து, முதல் வெற்றியை தந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று சிறிய மைதானமான, பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தை கொண்ட, டெல்லி மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணி நல்ல அடித்தளத்தை அமைத்தும் கூட அவர்களை 272 ரன்களுக்கு இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக கட்டுப்படுத்தினார்கள். குறிப்பாக பும்ரா மிகச் சிறப்பாக பந்து வீசினார்.

இதற்கு அடுத்து இலங்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான துவக்கத்தை கொடுத்தார். 63 பந்துகளில் சதம் நொறுக்கி வெற்றியை மிக மிக எளிதாக்கி தந்தார். இஷான் கிஷான் தன் பங்குக்கு 47 ரன்கள் எடுத்தார்.

அடுத்து வந்த விராட் கோலி களத்தில் நின்று பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்து, 56 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து போட்டியை முடித்து வைத்தார். இப்படி இரண்டு போட்டிகளிலும் வெவ்வேறான வீரர்கள் உள்ளே வந்து இந்திய அணியின் வெற்றிக்கு கையை உயர்த்தி இருக்கிறார்கள்.

- Advertisement -

நடப்பு உலகக்கோப்பையில் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிற இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்ற போட்டி, வருகின்ற சனிக்கிழமை அக்டோபர் 14ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் ஏற்பட்ட சிறிய பேட்டிங் சரிவையும் சரி செய்து சிறப்பாக தயாராகி இருக்கிறது.

இது குறித்து ட்விட் செய்துள்ள சச்சின் “பும்ரா மற்றும் ரோஹித் இருவரும் பேட்டிங் மற்றும் பவுலிங் யூனிட்டுக்கு மிகச்சிறப்பான ஆதரவை கொடுத்திருக்கிறார்கள். இரண்டு போட்டிகளிலும் வெவ்வேறு வீரர்கள் பங்களிப்பு செய்ததை பார்த்தோம். அக்டோபர் 14ம் தேதிக்கான விஷயங்கள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது. எதிர்பார்க்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!