ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முறியடிக்கப்படாத சச்சினின் சாதனைகள்!

0
2234

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . 30 போட்டிகளுக்கு மேல் முடிவடைந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்திலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன .

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியானது புள்ளிகளின் பட்டியலில் பின்தங்கியே இருக்கிறது . இதுவரை மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள மும்பை 6 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது . இன்னும் ஏழு போட்டிகள் மீதமுள்ள நிலையில் மும்பை அணி கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது .

- Advertisement -

இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார் . இவர் 2013 ஆம் ஆண்டு வரை மும்பை அணிக்காக கேப்டன் ஆக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . சச்சின் டெண்டுல்கரின் தலைமையின் கீழ் மும்பை அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக விளங்கியது .

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் நூறு சதங்கள் மற்றும் அதிகமான ரன்களை குவித்து சாதனை புரிந்திருக்கும் சச்சின் ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பான சாதனைகளை செய்து இருக்கிறார் . அவற்றில் சச்சினின் பல சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமலேயே இருக்கின்றன. ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் முறியடிக்கப்படாமல் இருக்கும் சச்சினின் சாதனைகள் என்ன என்று பார்ப்போம் .

கிரிக்கெட்டின் பிதாமகன் ஆன சச்சின் ஐபிஎல் தொடரின் முதல் 6 சீசன்களில் மும்பை அணிக்காக விளையாடி உள்ளார் . இந்த காலகட்டத்தில் அவர் புரிந்த சில சாதனைகள் இன்று வரை எந்த ஒரு வீரராலும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது ..

- Advertisement -

1, ஒரே சீசனில் மும்பை அணிக்காக அதிக ரன்களை குவித்துள்ள வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் இவர் 2019 நடைபெற்ற ஐபிஎல் தொடர்களின் போது ஒரே சீசனில் 618 ரன்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக குவித்தார் . இந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது .

  1. 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களின் போது எட்டு போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் அணியில் விளையாடிய மற்ற வீரர்களை விட அதிகமான ரண்களை சேர்த்து இருக்கிறார் . இந்த சாதனையும் இன்றுவரை முறியடிக்கப்படவில்லை.
  2. இன்று வரை மும்பை அணிக்காக ஒரே சீசனில் 600 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் . இந்த சாதனையும் இன்று வரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது .
  3. 35 வயதிற்கு மேல் ஐபிஎல் போட்டிகளில் 2334 ரன்கள் எடுத்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் என்பது குறிப்பிடத்தக்கது, இதுவரை 78 ஐபிஎல் போட்டிகளில் 2008 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 234 ரன்கள் சேர்த்திருக்கிறார் . இதில் ஒரு சதம் மற்றும் 13 அரை சதங்கள் அடங்கும் . ஐபிஎல் போட்டி தொடர்களில் சச்சின் சராசரி 34.83 ஆகும் . அவரது ஸ்ட்ரைக் ரேட் 119.81