கில் கிட்ட மொத்தம் 3 மாற்றத்தை பார்த்தேன்.. தம்பி அத நிச்சயம் செய்யப் போறார் – சச்சின் பாராட்டு

0
158
Sachin

இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் ஆட்டத்தையும் அணியையும் சிறப்பாக கட்டுப்படுத்தியதாக சச்சின் டெண்டுல்கர் ஆகியிருக்கிறார். மேலும் அவருடைய பேட்டிங்கில் செய்திருக்கும் மாற்றம் குறித்தும் பேசியிருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் போன்ற டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தொடரை சமன் செய்து அசத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்தியன் லெஜன்ட் சச்சின் டெண்டுல்கர் இளம் கேப்டன் சுப்மன் கில்லுக்கு பாராட்டுக்கள் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

கில் மீதான விமர்சனம்

இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக கில் நியமிக்கப்பட்ட பொழுது ஆசிய தாண்டி அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடித்ததில்லை. எனவே அவருக்கு கேப்டன் பொறுப்பு கொடுத்து இருக்கக் கூடாது எனவும், கேஎல்.ராகுல் அல்லது ரிஷப்மென்ட் இருவரில் ஒருவருக்கு காப்பர் பொறுப்பு கொடுத்து இருக்க வேண்டும் என விமர்சனங்கள் இருந்தது.

இந்த நிலையில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சதம் அடித்தார். மேலும் அடுத்த உடனே இரட்டை சதமும் அடித்தார். மொத்தம் நான்கு சதங்கள் கேப்டனாக முதல் டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவராகவும், சேனா நாடுகளில் தனது முதல் டெஸ்ட் தொடரை தோற்காமலும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

கில் செய்த மாற்றங்கள்

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசும் பொழுது “நான் கில்லிடம் கவனித்த ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால். ஒரு நல்ல பந்தை மதிக்க வேண்டும். பொதுவாக அவர் முன் காலை எடுத்து வைத்து பந்தை கொஞ்சம் கடினமாக தள்ளி விளையாடுவார். ஆனால் இந்த முறை முன் காலை எடுத்து வைத்து தற்காப்பு ஆட்டம் விளையாடினார். மேலும் பின் காலிலும் அவர் நல்ல தற்காப்பு ஆட்டம் விளையாடினார். மேலும் ஷாட் செலக்சன் அருமையாக இருந்தது”

இதையும் படிங்க : இந்திய அணி ஆடும் அடுத்த 4 பெரிய தொடர்கள்.. யாருடன் எப்போது தொடங்குகிறது?.. முழு விபரங்கள்

“அணியின் வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொருத்து கேப்டன்சி சில சமயங்களில் மாறுகிறது. பெரிய பார்ட்னர்ஷிப் உருவாகும் பொழுது பவுலர்கள் சில முயற்சிகளை தாமாக செய்வார்கள். அந்த நேரத்தில் பொறுமையாக இருந்து அணியை கட்டுப்படுத்த வேண்டும். இந்த வகையில் கேப்டனாக கில் அணியையும் ஆட்டத்தையும் சிறந்த முறையில் அமைதியாக இருந்து கட்டுப்படுத்தினார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -