தம்பி ரிஷப் மறக்கவே முடியாததை பண்ணிட்ட.. நீ செஞ்சது இந்த 2 விஷயத்தை ஞாபகப்படுத்தும் – சச்சின் பாராட்டு

0
292
Sachin

இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் காயத்துடன் விளையாடி அரை சதம் அடித்த ரிஷப் பண்ட்டை லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி இருக்கிறார்.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் கேப்டன் ஸ்டோக்ஸ் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

தொடரில் இருந்து வெளியேறிய ரிஷப் பண்ட்

நேற்று போட்டியில் முதல் நாளில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்யும்பொழுது கால் பாதத்தில் மிகவும் கடுமையாக காயமடைந்தார். களத்திலேயே அவருக்கு பாதத்தில் இருந்து ரத்தம் வந்தது. இதன் காரணமாக பேட்டிங் செய்ய முடியாமல் பாதியிலேயே வெளியேறினார்.

இந்த நிலையில் 37 ரன்கள் எடுத்து வெளியேறிய ரிஷப் பண்ட் இரண்டாவது நாளில் மீண்டும் ஒரு காயத்துடன் பேட்டிங் செய்ய வந்து ஆச்சரியப்படுத்தினார். ஏனென்றால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார் என செய்திகள் வந்திருந்தது. அவர் ஆறு வாரம் ஓய்வெடுக்க வேண்டுமென அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் வந்த ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

இன்று ரிஷப் பண்ட் காயத்துடன் அணிக்காக வந்து விளையாடியது இந்திய அணி ரசிகர்கள் தாண்டி இங்கிலாந்து ரசிகர்களையும் பெரிய அளவில் கவர்ந்தது. இதன் காரணமாக ரிஷப் பண்ட் பேட்டிங் செய்யும்பொழுது இங்கிலாந்து ரசிகர்களும் அவரைப் பெரிய அளவில் ஊக்குவித்தார்கள். மேலும் பல முன்னாள் வீரர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க : ஜடேஜா ஆட்டமிழந்ததில் சர்ச்சை.. இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் கேட்ச்சே பிடிக்கவில்லை என ரசிகர்கள் புகார்

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்துக் குறிப்பில் “வலியைத் தாண்டி விளையாடுவதும், அதைத் தாண்டி எழுவதும்தான் மன உறுதி. ரிஷப் பண்ட் காயம் அடைந்த பிறகு அணிக்காக களம் இறங்கிய அத்தகைய குணத்தை வெளிப்படுத்தினார். அவருடைய இந்த அரை சதம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான உறுதியை வெளிப்படுத்துகிறது. இது ஒரு துணிச்சலான முயற்சி. ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடினார். இது பல காலம் மறக்க முடியாததாக நினைவில் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -