ஜடேஜா ஆட்டமிழந்ததில் சர்ச்சை.. இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் கேட்ச்சே பிடிக்கவில்லை என ரசிகர்கள் புகார்

0
265

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ஜடேஜாவின் பேட்டிங் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது. நடப்பு தொடரில் ஜடேஜா தொடர்ந்து நான்கு அரை சதம் அடித்திருந்தார். இந்த தருணத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் பேட்டிங் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

மான்செஸ்டர் மைதானத்தில் இங்கிலாந்து அணியால் முதலில் பேட்டிங் செய்ய படிக்கப்பட்ட இந்திய அணி முதல் இன்னிங்சில்  400 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது.  இந்த தருணத்தில் ஜடேஜா வழக்கம்போல் பொறுப்பான ஆட்டத்தை விளையாடி வந்தார்.

- Advertisement -

கேட்ச் இல்லை என புகார்:

40 பந்துகளை எதிர்கொண்ட அவர் 20 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தின் 85 வது ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில் இரண்டாவது ஸ்லீப்பில் நின்று கொண்டிருந்த ஹாரிப் புரூக் உடன் கேட்ச் ஆனார்.ஆனால் ஹாரி புரூக்  கேட்ச் பிடிக்கும் போது பந்து கீழே பட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் கள நடுவர் இதற்கு அவுட் வழங்கினார்.

ஆனால் இதை எதிர்த்து ஜடேஜா எந்த ஒரு மறு ஆய்வும் செய்யாமல் களத்தை விட்டு வெளியே வந்தார். ஆனால் பலரும் இது நியாயமான கேட்ச் கிடையாது என்றும் பந்து கீழே பட்டது என்றும்குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இப்படி கடினமான கேட்ச் பிடிக்கும்போது நடுவர்கள் எப்போதும் மூன்றாம் நடுவரின் உதவியை நாடுவார்.

- Advertisement -

ரசிகர்கள் குற்றச்சாட்டு:

ஆனால் கள நடுவர் எந்த ஒரு உதவியும் நாடாமல் அவுட்டு வழங்கியது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை பலரும் தற்போதும் சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டி பல கேமரா ஆங்கிலில்  பார்க்கும்போது ஜடேஜா அவுட் ஆனது போல் தெரியவில்லை.

இதையும் பாருங்க: 3வது டெஸ்ட்.. ரிஷப் பண்ட் செய்த நம்ப முடியாத காரியம்.. இங்கிலாந்து ரசிகர்கள் வரை பாராட்டு

ஹாரி புரூக் கேட்ச் நியாயமாக இல்லை என்று குற்றச்சாட்டு உள்ளனர். ஜடேஜாவும் பந்து தரையில் பட்டதை பார்த்ததாகவும், ஆனால் அவர் ஏன் மூன்றாம் நடுவரின் உதவியும் நாடவில்லை என்றும் பலரும் கேட்டு இருக்கின்றனர். ஏற்கனவே ரிஷப் பன்ட் காயம் காரணமாக தடுமாறி வரும் நிலையில் ஜடேஜாவின் கேட்ச் ஆட்டத்தில் திருப்புமுனையில் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -